WHAT IS DISASTER?NOTE DOWN THE PRECAUTIONARY MEASURES FOR DISASTER. / பேரிடர் என்றால் என்ன? பேரிடர் தாக்கத்தை எதிர்கொள்ளத் தேவைப்படும் முன்னேற்பாடுகளை குறிப்பிடுக.

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

 

பேரிடர்

 

[the_ad id=”5123″]

 

பேரிடர் என்பது, புவிக்காலநிலை வேறுபாட்டுக் காரணிகள் (Geo-climatic factors) காரணமாக ஏற்படுகின்றன.
இவை மட்டுமல்லாமல் நிலவியல் கூறுகள், சுற்றுப்புறச்சூழல் சீர்கேடுகள், மக்கள்தொகைப் பெருக்கம், நகரமயமாதல் மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கம் ஆகியவற்றின் காரணமாகவும் பேரிடர்கள் நிகழ்கின்றன.
இயற்கைச் சீற்றங்களினாலும், மனிதத் தவறுகளினாலும் பல்வேறு இடர்களும் பேரிடர்களும் ஏற்படுகின்றன. இடர் (Hazard) என்பது, அபாயகரமானதாக உணரக்கூடிய ஒரு நிகழ்வு.
அந்நிகழ்வில் மனிதனின் அன்றாட வாழ்க்கைப் பாதிப்பு, உயிரிழப்பு, சுகாதாரக் கேடுகள், உடைமைகளின் சேதம், சமுதாய மற்றும் பொருளாதாரச் சீர்கேடு, சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை ஏற்படுகின்றன.
இந்த இடரானது, உச்சநிலையை அடையும்போது பேரிடராக (Disaster) மாறுகிறது. மக்களின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டுப் பெருமளவில் உயிர்ச்சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தும் ஒரு நிகழ்வைப் “பேரிடர்” என்கிறோம்.
பேரிடர்களின் தன்மைகளை அறிந்து, அவற்றால் ஏற்படும் தீமைகளிலிருந்து விடுபட உதவும் உத்திகளைச் செயல்படுத்துவதே பேரிடர் மேலாண்மை ஆகும்
நிலப்பகுதியில் சீற்றம் ஏற்பட்டால், நிலநடுக்கமாகத் தோன்றிப் பேரழிவை ஏற்படுத்துகிறது. நீர் சீற்றம் அடைவதனால், வெள்ளப் பெருக்கெடுத்து எண்ணற்ற அழிவுகள் ஏற்படுத்துகின்றன.
காற்று சீற்றம் அடைவதால், புயல் உருவாகிப் பெரும்பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், மழையின்மையால் நிலப்பரப்பு வெகு எளிதாக வறட்சியால் பாதிக்கப்படுகிறது.

[the_ad id=”5123″]

புவியின் உட்பகுதியில் வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக எரிமலைத் தீக்குழம்புகள் மேலெழும்பி வந்து பெரும்பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
மழைக்காலங்களில் தோன்றும் மின்னல், இடி மற்றும் வெள்ளம் சில நேரங்களில் உயிரினங்களுக்கும் உடைமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இயற்கைப் பேரிடர்கள் மட்டுமல்லாமல், மனிதனாலும் பல பேரிடர்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

 

இயற்கைப்பேரிடர்கள்

 

[the_ad id=”5123″]

நிலநடுக்கம் (Earthquake)
எரிமலை வெடிப்பு
சுனாமி
புயல் (Cyclone)
வெள்ளப் பெருக்கு (Flood)
வறட்சி (Drought)
நிலச்சரிவு
பனிச்சரிவு (Avalanche)
மின்னல் மற்றும் இடி (Lingtning and Thunder)

 

பேரிடர் தாக்கத்தை எதிர்கொள்ளத் தேவைப்படும் முன்னேற்பாடுகள்

 

[the_ad id=”5123″]

பேரிடரின் தன்மை, தீவிரம், தாக்கும் இடங்கள் மற்றும் இழப்புகளை அறிதல்
பேரிடரைத் தவிர்க்க இயற்கை வளங்களைச் சேகரித்தல் மற்றும் எதிர்கொள்ள மனித வளங்களை ஆயத்தப்படுத்துதல்
தகவல் தொடர்புகளை மேம்படுத்தி வைத்தல்
பாதுகாப்பு அமைப்புகளை ஏற்பாடு செய்தல் பெண்கள், குழந்தைகள் மற்றும் இயலாதோர்களைக் காக்கும் உத்திகளை வகுத்தல் உணவுப் பொருள்கள், எரிபொருள்கள் (சமையல் வாயு), குடிநீர், உயிர்காக்கும் மருந்துகள், துணிமணிகள், முதலுதவிப் பொருள்கள் முதலியவற்றைப் பேரிடர் காலங்களில் சேகரித்து வைத்தல்

எச்சரிக்கை

 

எச்சரிக்கைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளல்
வதந்திகளைப் பேரிடர் காலத்தில் நம்பாதிருத்தல்
உரிய முன்னெச்சரிக்கைகளை உடனடியாகப் பின்பற்றுதல் இதனால் உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஆகியவை வெகுவாகக் குறையும்)

Disaster

A disaster is a serious disruption, occurring over a relatively short time, of the functioning of a community or a society involving widespread human, material, economic or environmental loss and impacts, which exceeds the ability of the affected community or society to cope using its own resources.

Natural disasters

[the_ad id=”5123″]

A natural disaster is a natural process or phenomenon that may cause loss of life, injury or other health impacts, property damage, loss of livelihoods and services, social and economic disruption, or environmental damage.

Various phenomena like earthquakes, landslides, volcanic eruptions, floods, hurricanes, tornadoes, blizzards, tsunamis, and cyclones are all natural hazards that kill thousands of people and destroy billions of dollars of habitat and property each year.

Man-made disasters

[the_ad id=”5123″]

Human-instigated disasters are the consequence of technological or human hazards. Examples include stampedes, fires, transport accidents, industrial accidents, oil spills, nuclear explosions/nuclear radiation. War and deliberate attacks may also be put in this category.

Other types of man-made disasters include the more cosmic scenarios of catastrophic global warming, nuclear war, and bioterrorism.

Responses

[the_ad id=”5123″]

Shut off utilities; Evacuate building if necessary; Determine impact on the equipment and facilities and any disruption

Attempt to suppress fire in early stages; Evacuate personnel on alarm, as necessary; Notify fire department; Shut off utilities; Monitor weather advisories

Contact local police or law enforcement

Leave the area and call the local fire department for help. If anyone was affected by the spill, call the your local Emergency Medical Services line

 

[amazon_link asins=’B0108IPGIO,B00LOD799W,B00LOD6Y20,B00LOD6BKU,B00LOD6S3K,B0108IPDAK,B00LOD658S,B00LOD6POW,B00S2SEV7K’ template=’ProductGrid’ store=’upsctamil-21′ marketplace=’IN’ link_id=’ec304838-b3ba-4d4c-95a1-531e7b4766c2′]