CPEC என்றால் என்ன?

சீனாவின் செல்வாக்கை உலகளவில் உயர்த்தும் நோக்கமாக கொண்ட பெல்ட் அண்ட் ரோடு (Belt and road) திட்டத்தின் ஒரு பகுதியே சீன பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) ஆகும்.

CPEC பற்றி விவரங்கள் :

3 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் நெடுஞ்சாலைகள், இரயில் பாதை மற்றும் குழாய் வழிப் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டம் ஆகும்.

இது பாகிஸ்தானில் உள்ள காதர் துறைமுகத்தையும் சீனாவில் உள்ள ஜின்ஜியாங் நகரத்தையும் இணைக்கும் நோக்கமாக கொண்டது. இதன் செலவுகள் பெரும்பாலும் சீன வங்கிகள் பாகிஸ்தான் அரசுக்கு மானியத்துடன் கூடிய கடனாக வழங்கும்.

[the_ad id=”6240″]

 

இந்தியாவிற்கு உள்ள சிக்கல்கள்:

இத்திட்டம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது.
இந்திய பெருங்கடலில் இந்தியாவின் வலிமையை குறைக்கும் என பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.

நடப்பு சிக்கல்:

1124 மெகாவாட் நீர்மின் திட்டத்தை பாகிஸ்தானில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (கோஹலா) அமைக்க உள்ளது.

2.4 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு ஆகும்.

இது ஜீலம் நதிக்கரையில் கட்டப்படுகிறது.
ஆண்டுக்கு

55 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டது இந்த நீர் மின் திட்டம்.