உயிரியல் பல்வகை சட்டம் 2002 ன் முக்கியத்துவத்தை விளக்குக / Biological Diversity Act – 2002

உயிரியல் பல்வகை சட்டம் (Biological Diversity Act – 2002)

 • 1992ல் கையெழுத்தான ரியோ-டி-ஜெனிரோவில் உயிரியல் பல்வகை மீதான ஐ.நா. உடன்படிக்கையிலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
 • இதன் நோக்கம் உயிரியல் பல்வகை பாதுகாப்பு. அதாவது காடுகளில் உள்ள தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் அவற்றின் மரபு பொருட்கள், அவற்றின் இயல்பான வழித்தோன்றல்கள் மற்றும் அவற்றின் திறன் சார்ந்த அறிவு சமன்பாடு போன்றவைப் பாதுகாக்க இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
 • பல்லுயிர் வாழ்நிலைச் சட்டத்தை கடந்த 2002ம் ஆண்டில் இந்திய அரசு நிறைவேற்றியது.
 • இந்தச் சட்டம் அதிகாரப் பரவலாக்கப்பட்ட மூன்று அடுக்கு அமைப்பின் மூலம் தேசிய, மாநில மற்றும் உள்ளுர் அளவில் செயல்படுத்தப்படுகிறது.
 • இந்தச் சட்டத்தின் 8வது பிரிவின்படி தேசிய அளவில் தேசிய பல்லுயிர் ஆணையத்தை இந்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது.
 • இது தன்னாட்சி அதிகாரமும், சட்ட அங்கீகாரமும் கொண்ட ஆணையம் ஆகும்.
 • பல்லுயிர் வாழ் நிலையை பாதுகாத்தல், அதன் நீடித்த பயன்பாடு, அத்தகைய உபயோகத்தால் கிடைக்கும் பயன்களை நியாயமாகவும், சமமாகவும் பகிர்ந்து கொள்வதை உறுதிசெய்தல் ஆகியவை தொடர்பாக இந்திய அரசுக்கும் பல்வேறு அமைச்சகங்களுக்கும் அறிவுரைகளை வழங்குதல், ஒழுங்குமுறைப் பணிகளை செய்தல், உதவிகளை வழங்குதல் ஆகியவைதான் இந்த ஆணையத்தின் பணிகள் ஆகும்.
 • வல்லுனர் குழுக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் ஆலோசனைகளை நடத்துதல் மற்றும் வழங்குதல் மூலம் இந்த ஆணையம் செயல்படுகிறது.

 

Biological Diversity Act, 2002
 • The government passed the biodiversity act to conserve and promote sustainable use of biological diversity and to regulate the access to biological resources of the country with an equitable share in benefits.
 • It sets up National Biodiversity Authority (NBA), State Biodiversity Board (SBB) and Biodiversity Management Committees.
National Biodiversity Authority (NBA) 
Functions
 • Regulation of acts prohibited under the Act
 • Advise the Government on the conservation of biodiversity
 • Advise the Government on the selection of biological heritage sites
 • Take appropriate steps to oppose the grant of intellectual property rights in foreign countries, arising from the use of biological resources or associated traditional knowledge
 • Besides, it aims to respect and protect the knowledge of local communities traditional knowledge related to biodiversity and secure sharing of benefits with local people as conservers of biological resources and holders of knowledge and information relating to the use of biological resources.
 • Besides, it also has provisions for notifying heritage sites by State Government in consultation with the local bodies.

 

REFERENCE

TAMIL

ENGLISH