PSTM சட்ட திருத்தம் சொல்வது என்ன?

PSTM என்பது தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு அரசு பணியில் ஒதுக்கீடு செய்யப்படும் ஒரு வகையான இட ஒதுக்கீடு ஆகும். தற்போது தமிழ்நாட்டில் தமிழ் வழியில் கல்வி பயின்று 20 சதவீதம் மாநில அரசு பணிகள் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

[the_ad id=”6240″]

புதிய மாற்றங்கள் என்ன?

தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு பெற வேண்டுமெனில் விண்ணப்பதாரர் தனது கல்வி தகுதியினை முழுவதுமாக தமிழ் வழியிலேயே படித்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக குரூப்-1 குரூப்-2 போன்ற தேர்வுகளில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தங்களது கல்வித் தகுதியான பட்டப் படிப்பை தமிழ் வழியில் பயின்று இருப்பது மட்டுமல்லாமல் பள்ளிக்கல்வியும் அதாவது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் வழியில் பயின்று இருந்தால் மட்டுமே அவர்கள் தமிழ் வழியில் படித்ததற்கான இட ஒதுக்கீடு பெற முடியும்.

[the_ad id=”6240″]

 

முன்னர் இருந்த நடைமுறை என்ன?

தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் வரை தமிழ் வழியில் பயின்றவர் என்ற வரையறையானது நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை மட்டும் தமிழ் வழியில் பயின்று இருந்தால் போதுமானதாகும். அதாவது குரூப்-1 குரூப்-2 போன்ற தேர்வுகளில் பள்ளிப் படிப்பை ஆங்கில வழியில் கற்றிருந்தாலும் பட்டப்படிப்பை தமிழ் வழியில் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ ஏதேனும் ஒரு பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருந்தால் அவர்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீட்டைப் பெற முடியும்.

 

[the_ad id=”6240″]

முன்னர் இருந்த நடைமுறையில் இருந்த குறைபாடுகள் என்ன?

முன்னர் இருந்த நடைமுறையில் விண்ணப்பதாரர்கள் ஆங்கில வழியில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை முடித்து இருந்தாலும் தமிழ் வழி இட ஒதுக்கீட்டினை பெறும் பொருட்டு பல்கலைக்கழகங்களில் பகுதிநேரமாக தமிழ்வழிப் படிப்பினை அதாவது பட்டப்படிப்பினை முடிப்பதற்கான சான்றிதல்களை பெற்று இந்த இட ஒதுக்கீட்டினை பெற்றுக் கொண்டிருந்தனர். இதன் காரணமாக உண்மையாகவே பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழ் வழியில் கல்வி கற்றவர்கள் பெரும் அளவில் பாதிப்பு அடைந்தனர்.

தொலைதூரக் கல்வி பட்டம் பெற்றவர்களுக்கு இந்த சட்டத்தை ரத்தத்தினால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

இந்த சட்ட திருத்தம் ஆனது தொலைதூரக்கல்வியில் பயின்றவர்களைப் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் குறிப்பிடப்படவில்லை. எனவே ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் முறையே பின்பற்றப்படுகிறது. அதாவது தொலைதூரக்கல்வி முழுநேர கல்விக்கு சமமானதாக கருதப்படும். எனவே பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழ் வழியில் படித்ததற்கானச் சான்றிதழ் வைத்திருக்கும் பொழுது அவர்கள் இந்த இட ஒதுக்கீட்டினை பெறுவதற்கான முழு தகுதியும் பெறுகின்றனர்.

 

[the_ad id=”6240″]

 

தேர்வுகளை தமிழ் வழியில் தான் எழுத வேண்டுமா?

20 சதவீத இட ஒதுக்கீடு என்பது தமிழ்ப்பள்ளிகளில் பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க முன்னுரிமை வழங்கப்படுவதற்கான ஒரு ஏற்பாடு ஆகும். தேர்வை எந்தெழியில் எழுதுவது என்பது தேர்வர்களின் விருப்பத்திலே விடப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்பட்டு செய்யப்படாத மாற்றங்கள்.

தேவர்கள் தமிழ் வழியில் எழுத வேண்டும் என்ற கட்டாயம் எந்த ஒரு பகுதியிலும் குறிப்பிடப்படவில்லை. எனவே தேர்வு எழுதுபவர்கள் குரூப் 1 முதன்மை தேர்வு அல்லது குரூப் 2 முதன்மை தேர்வு ஆங்கிலத்தில் கூட இறுதி வெற்றி பெறும் நடைமுறையே இன்றளவும் உள்ளது. 

[the_ad id=”6240″]

 

டிப்ளமோ படித்தவர்களை நிலை என்ன?

10+2+3 முறையில் படித்தவர்களுக்கு தெளிவான விளக்கங்கள் கொடுக்கப் பட்டுள்ளது. அதேபோன்று டிப்ளமோ பயின்றவர்கள் டிஎன்பிஎஸ்சி ஆல் தேர்ந்தெடுக்கப்படும் பொழுது பத்தாம் வகுப்பு தமிழ் வழியிலும் டிப்ளமோ தமிழ் வெளியிலும் இருந்தால் மட்டுமே இந்த இட ஒதுக்கீட்டைப் பெற முடியும். அதே போன்று பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ பயில்பவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு இரண்டுமே தமிழ் வழியில் படித்து டிப்ளமோ  தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே இந்த இட ஒதுக்கீட்டினை பெற முடியும்.

பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ முடித்து விட்டு இளங்கலை பட்டம் தமிழ் வழியில் படித்திருப்பார்கள். இவர்களில் சிலர் பத்தாம் வகுப்பு தமிழ் வழியிலும் டிப்ளமோ ஆங்கில வழியிலும் இளங்கலை படிப்பை தமிழ் வழியிலும் படித்திருப்பார்கள். அவ்வாறு படித்திருந்தால் பட்டப்படிப்பு தரத்திலான தேர்வுகளுக்கு  தமிழ் வழியில் படித்ததற்கான உரிமை கோர முடியாது.

 

PSTM பற்றி மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும். அதற்கான பதில்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

3 thoughts on “PSTM சட்ட திருத்தம் சொல்வது என்ன?”

  1. தொலைதூர கல்வியில் பட்டம் பெற்றவர்கள் தமிழ்வழிச்சான்று எப்படி பெறுவது?

  2. நான் 10ம் வகுப்பு தமிழ் வழியில் அரசு பள்ளியில் பயின்றுள்ளேன்.
    பத்தாம் வகுப்பில் கணிதப் பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்ததால் மீண்டும் (private ) தனித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன்.

    நான் தமிழ்வழி பயின்றோர்க்கான இட ஒதுக்கீட்டிற்கான PSTM பெற விண்ணப்பிக்கலாமா

Comments are closed.