பெகாசஸ் (Pegasus) என்றால் என்ன? / What is Pegasus Software?

பெகாசஸ் (Pegasus)
 • பெகாசஸ் என்பது ஒருவரின் செல்போனை உளவு பார்க்கும், ரகசியங்களைத் திருடும் ஒரு தீங்கிழைக்கக் கூடிய, மிக நவீனமான மென்பொருள்.
 • இந்த மென்பொருள் ஒருவருடைய செல்போனுக்குள் அவருக்குத் தெரியாமல் நுழைந்து, அவரின் தனிப்பட்ட விவரங்களைத் திருடிவிடும்.
 • இந்த மென்பொருளைப் பயன்படுத்துவோர், வெகுதொலைவில் இருந்தே இந்த மென்பொருளை இயக்க முடியும்.
 • குறிப்பாக ஆப்பிள், ஆண்ட்ராய்ட் செல்போன்களை ஹேக் செய்ய வேண்டும் என்பதற்காகவே பெகாசஸ் வடிவமைக்கப்பட்டது. ஒருவருக்குத் தெரியாமல் ஏதாவது மெசேஜ் வடிவிலோ அல்லது வாட்ஸ் அப் மிஸ்டு கால் மூலமோ அல்லது, ஏதேனும் லிங்க் மூலமோ செல்போனுக்குள் வந்துவிடும்.
 • அந்த லிங்க்கை செல்போன் உரிமையாளர் டச் செய்தால் பெகாசஸ் மென்பொருள் இயங்கத் தொடங்கி, செல்போனுக்குள் தன்னைப் பதிவிறக்கம் செய்துகொள்ளும்.
 • இந்த மென்பொருள் பதிவிறக்கம் ஆனபின், அதை வெகுதொலைவில் இருந்து இயக்குபவர் தனக்குத் தேவையான தகவல்களை செல்போனில் இருந்து திருட முடியும். குறிப்பாக செல்போனின் கேமரா பகுதி, மைக்ரோஃபோன் பகுதியில் இந்த மென்பொருள் தீவிரமாகச் செயல்படும்.
பெகாசஸ் மென்பொருள் எவ்வாறு வேலை செய்கிறது?
 • பெகாசஸ் மென்பொருள் அதிநவீனத் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. செல்போனுக்கு வரும் தீங்கிழைக்கக்கூடிய இணைப்பைத் தெரியாமல் தொட்டுவிட்டால் அதன் மூலமும், டெக்ஸ்ட் மெசேஜ்கள் மூலமும் பெகாசஸ் மென்பொருள் செல்போனுக்குள் நுழைந்துவிடும்.
 • செல்போன் பயன்படுத்துவோருக்குத் தெரியாமல் இந்த மென்பொருள் தன்னைப் பதிவிறக்கம் செய்து, தொலைவில் இருந்து ஹேக்கர்கள் கேட்கும் கேள்விகளுக்குத் தேவையான பதில்களையும், தகவல்களையும் திருடி இந்த மென்பொருள் வழங்கும்.
 • வெகுதொலைவில் இருந்தவாறே ஹேக்கர்கள் பெகாசஸ் மென்பொருளை இயக்க முடியும். தங்களுக்குத் தேவையான தகவல்களை செல்போனில் இருந்து திருட முடியும்.
 • குறிப்பாக செல்போனில் இருக்கும் பாஸ்வேர்ட், கான்டாக்ட் லிஸ்ட், காலண்டர், டெக்ஸ்ட் மெசேஜ்கள், வாய்ஸ் மெசேஜ்கள், கால்களை ஒட்டுக் கேட்பது, கேமராவில் இருந்து திருடுவது, என்கிரிப்ட் ஆடியோ மெசேஜ்களையும் திருடக்கூடிய வல்லமை பெகாசஸ் மென்பொருளுக்கு இருக்கிறது.
 • அதிநவீன வசதிகள், தொழில்நுட்பம் கொண்ட மென்பொருள் என்று பெகாசஸைக் கூற முடியும்.
இந்த மென்பொருளை எந்த நாடு உருவாக்கியது?
 • பெகாசஸ் மென்பொருளை இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்பப் பிரிவான என்எஸ்ஓ 2010-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி கண்டுபிடித்துள்ளது.
 • அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கையின்படி என்எஸ்ஓ (NSO) என்ற வார்த்தைக்கு விரிவாக்கம் என்பது நிவ் கார்மி, ஷாலெவ் ஹூலியோ, ஓம்ரி லாவி ஆகியோரின் பெயரின் முதல் எழுத்தில் என்எஸ்ஓ உருவாக்கப்பட்டது.
 • என்எஸ்ஓ அமைப்பின் நோக்கம் என்பது புதிய நவீன தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து, சட்டம்- ஒழுங்கு மற்றும் உளவுத்துறைக்கு வழங்கி தொலைவில் இருந்தவாறே எதிரி நாட்டைச் சேர்ந்தவர்களின் செல்போனில் இருந்து தகவல்களைத் திருடுவதாகும்.
 • இந்த பெகாசஸ் மென்பொருள் இன்று இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் பயன்படுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்திய அரசு மறுக்கிறது.
 • சர்வதேச தகவலின்படி, பெகாசஸ் மென்பொருள் மூலம் ஓராண்டுக்கு 500 பேரின் செல்போன்களைக் கண்காணிக்க முடியும். ஆனால், ஒரே நேரத்தில் 50 பேரின் செல்போன்களைக் கண்காணிக்க முடியும். ஓராண்டு இந்த மென்பொருளைப் பயன்படுத்த லைசன்ஸ் கட்டணமாக 70 முதல் 80 லட்சம் டாலர்கள் செலுத்த வேண்டும்.
பெகாசஸை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள்?
 • என்எஸ்ஓ அமைப்பு இதுவரை தன்னுடைய உளவு மென்பொருளை எந்தெந்த நாடுகள் பயன்படுத்துகின்றன என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
 • ஆனால், இந்த மென்பொருள் பெரும்பாலும், ஒரு நாட்டின் அரசுக்கே அதிகாரபூர்வமாக விற்கப்பட்டுள்ளது.
 • அதாவது, அரசின் விசாரணை முகமைகள், அமைப்புகள் இந்த மென்பொருளை வாங்கியுள்ளன.
 • 2018-ம் ஆண்டு சிட்டிஸன் லேப் அறிக்கையின்படி, இந்தியா, பஹ்ரைன், கஜகஸ்தான், மெக்சிகோ, மொராக்கோ, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட45 நாடுகள் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.
 Pegasus Software
 • It is a spyware tool developed by an Israeli firm, the NSO Group.
 • Spyware spies on people through their phones.
 • Pegasus works by sending an exploit link, and if the target user clicks on the link, the malware or the code that allows the surveillance is installed on the user’s phone.
 • Once Pegasus is installed, the attacker has complete access to the target user’s phone.
 What can Pegasus do?
 • Pegasus can “send back the target’s private data, including passwords, contact lists, calendar events, text messages, and live voice calls from popular mobile messaging apps”.
 • The target’s phone camera and microphone can be turned on to capture all activity in the phone’s vicinity, expanding the scope of the surveillance.
 What is a zero-click attack?
 • A zero-click attack helps spyware like Pegasus gain control over a device without human interaction or human error.
 • So all awareness about how to avoid a phishing attack or which links not to click is pointless if the target is the system itself.
 • Most of these attacks exploit software that receives data even before it can determine whether what is coming in is trustworthy or not, like an email client.
 What is the Difference Between Malware, Trojan, viruses, and Worm?
 • Malware is defined as software designed to perform an unwanted illegal act via the computer network.
 • It could be also defined as software with malicious intent.
 • Malware can be classified based on how they get executed, how it spread, and/or what they do. Some of them are discussed below.
 • Virus: A program that can infect other programs by modifying them to include a possibly evolved copy of itself.
 • Worms: Disseminated through computer networks, unlike viruses, computer worms are malicious programs that copy themselves from system to system, rather than infiltrating legitimate files.
 • Trojans: A trojan or trojan horse is a program that generally impairs the security of a system.
 • Trojans are used to create back-doors (a program that allows outside access into a secure network) on computers belonging to a secure network so that a hacker can have access to the secure network.
 • Spyware: Invades a computer and, as its name implies, monitors a user’s activities without consent.
 • Spywares are usually forwarded through unsuspecting e-mails with bonafide e-mail i.ds. Spyware continues to infect millions of computers globally.