மூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்?- பிரச்சினை என்ன?
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இப்போது விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள, போராட்டத்துக்குக் காரணமாக இருக்கும் மூன்று வேளாண் மசோதாக்கள்:
-
வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் வசதி ஏற்படுத்துதல்) மசோதா, 2020
-
விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் (அதிகாரம் அளிப்பு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த மசோதா 2020
-
அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020
சேர்க்கவேண்டிய POINTS அல்லது தலைப்புகள்
இந்த 3 சட்டங்கள் எதை நோக்கியது?
1. அத்தியாவசியப் பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து விலைகள் கட்டுப்பாட்டைத் தளர்த்தி சில பொருட்கள் அளவில் அதிகமாக விற்கப்படுவது அத்தியாவசியப் பொருளாகக் கொள்ளப்படும்.
2. ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதி மற்றும் வசதி செய்து கொடுத்தல்
3. ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிக்களின் எல்லைக்கு வெளியே தனியார் சந்தைகளை நிறுவுவது.
ஏன் எதிர்க்கப்படுகிறது?
-
விவசாயிகளும் விவசாயத் தலைவர்களும் கவலைப்படுவது என்னவெனில் மண்டிகள் என்ற ஏபிஎம்சிக்கு வெளியே தனியார்களை கொண்டு வருவதன் மூலம் ஏபிஎம்சியில் விவசாயப் பொருட்களை வாங்குபவர்கள் எண்ணிக்கை சரியும்.
-
தனியார் சந்தைகளை உள்ளே கொண்டு வந்து அவர்களுக்குச் சாதகமாக இந்த சலுகைகளை அளிக்கும் போது இது சரிசமமான ஒரு போட்டிச் சந்தையை உருவாக்காது.
-
ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் கமிட்டிகளுக்கு வெளியே இருக்கும் தனியார்களுக்கு கூடுதல் கட்டணம், வரி இல்லை என்றால் ஏபிஎம்சி பக்கம் யாரும் வர மாட்டார்கள். வர்த்தகர்கள் எளிதாக வெளியேயிருந்து கொள்முதல் செய்து கொள்வார்கள்.
-
அவர்கள் தங்கள் லாபத்தில் ஒருவிகிதத்தை தருவதாகக் கூறி விவசாயிகளை ஆசை காட்டி இழுக்க முடியும். இப்படி செய்தால் ஏபிஎம்சி முறை முற்றிலும் சரிவடைந்து விடும்.
-
பிஹாரில் ஏற்கெனவே ஏபிஎம்சி முறை ஒழிக்கப்பட்டு 2006-ல் மாற்று முறை கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து குறைந்தபட்ச ஆதார விலை அளிக்க வேண்டிய விவசாய விளைபொருட்களை அரசு வாங்குவது கிட்டத்தட்ட முற்றிலும் நிறுத்தப்பட்டதுதான் நடந்தது.
-
தீர்வுகள்
முடிவுரை
-
ALWAYS BE POSSITIVE.
-
உங்கள் கருத்து
REFERENCE |
TAMILTAMILDETAILED VIDEO |
…. |
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் UPSC எழுதுவோருக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.