ஒரு பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணங்கள் மற்றும் விளைகள் யாவை? / What are the causes and effects of inflation on the economy?

பணவீக்கம்
 • பணவீக்கம் என்பது தொடர்ச்சியான மற்றும் குறிப்பிடும் படியான பொது விலைமட்ட அதிகரிப்பு ஆகும்
 • சற்று விளக்கமாக கூறினால், பணவீக்கம் என்பது பண்டங்கள் மற்றும் பணிகளில் பொதுவிலைமட்ட அதிகரிப்பு விகிதத்தையும், அதன் விளைவாக பணத்தின் வாங்கும் சக்தி குறைவதையும் காட்டுகிறது.
பணவீக்கத்திற்கான காரணங்கள்
 • இந்தியாவில் பல்வேறு காரணங்களால் பணவீக்கம் ஏற்படுகிறது.
 • அது ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு அமைந்துள்ளன:
பண அளிப்பு உயர்வு
 • காகித பண அளிப்பு உயர்வினால் மொத்த தேவை அதிகரித்து பணவீக்கம் ஏற்படுகிறது.
 • பெயரளவு பண அளிப்பு (Nominal Money Supply) உயர்வு பணவீக்கத்தை அதிகரிக்கின்றது.
 செலவிடத் தகுந்த வருவாயில் (Disposable Income) உயர்வு
 • மக்களின் செலவிடத் தகுந்த வருவாய் அதிகரிக்கும்பொழுது அவை பொருட்கள் மற்றும் பணிகளுக்கான தேவையை தூண்டுகின்றன
 • செலவிடத் தகுந்த வருவாய் உயர்வு, தேசிய வருவாய் அதிகரிப்பினாலோ அல்லது வரிவிகித குறைப்பினாலோ ஏற்படும்.
 • இதன் காரணமாக பணவீக்கம் ஏற்படும்.
 உயர்ந்து வரும் பொதுச் செலவுகள்
 • வளர்ச்சி மற்றும் சமுதாய நலத் திட்டங்களை அமல்படுத்துதல் போன்றவற்றில் அரசின் செயல்பாடுகள் விரிவடைந்து வருவதால் பொதுச் செலவுகளின் அளவு கூடி வருகிறது. இதன் காரணமாகவும் பணவீக்கம் ஏற்படுகிறது.
 நுகர்வோர் செலவு அதிகரித்தல்
 • தவணை கொள்முதல் போன்ற கடன் கொள்முதல் முறைகள் அமல்படுத்தப்படுவதால் நுகர்ச்சிப் பொருட்கள் மற்றும் பணிகளுக்கான தேவை அதிகரித்து அதன் காரணமாக விலைவாசி அதிகமாகி பணவீக்கம் ஏற்படுகிறது.
 மலிவு பணக் கொள்கை (Cheap Money Policy)
 • மைய வங்கியின் மலிவுப் பணக்கொள்கை பொருளாதாரத்தில் கடன் அளவை அதிகப்படுத்தும்.
 • இக்கடன் அதிகரிப்பு, பொருட்கள் மற்றும் பணிகளுக்கான தேவையை உயர்த்துவதால் ஏற்படும் விலைவாசி உயர்வு பணவீக்கத்தை ஏற்படுத்துகிறது.
 பற்றாக்குறை நிதியாக்கம்
 • தொடர்ந்து பொதுச் செலவுகள் கூடிவருவதால், அரசின் வரவுசெலவு திட்டத்தில் பற்றாக்குறைக்குறை ஏற்படுகிறது
 • இப்பற்றாக்குறையை ஈடு செய்ய கடன் வாங்குதல், புதிய காகிதப் பணம் அச்சடித்தல் என பற்றாக்குறை நிதியாக்க முறைகளில் அரசு ஈடுபடுகிறது
 • இதன் விளைவாக தொகு அளிப்பைவிட தொகு தேவையின் அளவு அதிகரித்து, விலைவாசி உயர்ந்து பணவீக்கம் ஏற்படுகிறது.
 கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள், நடவடிக்கைகள் மற்றும் கறுப்புப் பணம் 
 • இலஞ்சம் மற்றும் வரிஏய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கறுப்புப் பணம் மற்றும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் உருவாகின்றன
 • மேற்கண்ட நடவடிக்கையில் ஈடுபடுவோர் பகட்டாக செலவு செய்வதால் தொகு தேவை அதிகரிக்கின்றது
 • அதே சமயம் கருப்புச் சந்தையும், பதுக்கலும் தொகு அளிப்பினை குறைக்கின்றது.
 • இவைகளின் காரணமாக விலைவாசி உயர்ந்து பணவீக்கம் ஏற்படுகிறது.
 பொதுக்கடனை மீளச் செலுத்துதல் 
 • உள்நாட்டில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பொதுக்கடனை அரசு திரும்பச் செலுத்தும்பொழுது மொத்த பண அளிப்பில் அதிகரிப்பு ஏற்படுகிறது.
 • இது தொகு தேவையினை அதிகரித்து பணவீக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
ஏற்றுமதி உயர்வு
 • ஏற்றுமதியை ஊக்கப்படுத்தும் பொழுது உள்நாட்டில் பொருள் அளிப்பு குறைந்து, விலைவாசி உயர்வு ஏற்படுகிறது. இதன் காரணமாக பணவீக்கம் ஏற்படுகிறது.
பணவீக்கத்தின் விளைவுகள்
பணவீக்கத்தின் விளைவுகள் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது.
 • உற்பத்தியின் மீதான விளைவு.
 • பகிர்வின் மீதான விளைவு.
உற்பத்தியின் மீதான விளைவுகள்
 • மிதமான பணவீக்கம் உற்பத்தியாளார்கள் மற்றும் வணிகர்களுக்கு ஒரு ஊக்கக் காரணியாக செயல்படும்
 • மிதமான விலைவாசி உயர்வினால் ஏற்படும் இலாபத்தினால் தூண்டப்பட்டு உற்பத்தி மற்றும் வணிகத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்கும்
 • தொடர்ந்து வேலைவாய்ப்பும் வருமானமும் அதிகரிக்கும்.
 • ஆனால், மேற்சொன்ன கூற்றுகள் உற்பத்திக் காரணிகள் முழுவேலைவாய்ப்பை எய்தாத நிலையில் மட்டுமே சரியாக இருக்கும்.
 • அதேசமயம் உயர் பணவீக்கம் பணத்தின்  மதிப்பினை குறைப்பதன் மூலம், மக்களின் சேமிப்பை குறைக்கும்.
 • பணவீக்கத்தின் காரணமாக பணத்தின் மதிப்பு குறிப்பிடத் தகுந்த அளவு குறைவதால் நாட்டில் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கும் வெளிநாட்டு மூலதனங்கள் திரும்பிச் செல்லும்.
 • மேற்கண்ட நடடிக்கையின் காரணமாக மூலதன திரட்சி குறையும். இது புதிய முதலீட்டில் பின்னடைவை ஏற்படுத்தி நாட்டின் உற்பத்தியின்மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
 • தொழில் முனைவோர் மற்றும் வணிகர்களின் இடர் ஏற்றல் பணியினை ஊக்கமிழக்கச் செய்வதாக அமையும்.
 • பதுக்கல்காரர்களும் நுகர்வோரும் பொருட்களை பதுக்கி வைக்க பணவீக்கம் காரணமாக அமைகிறது. இது தொடர்ந்து, உயர் பணவீக்கத்திற்கு வழிவகுக்கிறது.
 • பணவீக்கமானது பொருள் உற்பத்தியை அதிகரிப்பதைவிட, ஊக வாணிப செயல்பாடுகளை அதிகரிக்கின்றது
 • ஊக வாணிபம் என்பது இலாப நோக்கில் பங்குகள் அல்லது பொருட்கள் விலை குறையும் என காத்திருந்து, அது குறையும்பொழுது வாங்கி விலை அதிகரிக்கும்பொழுது விற்பனை செய்வது ஆகும்.
 • இதனால் நிகர உற்பத்தியோ, நிகர வேலைவாய்ப்போ அதிகரிப்பதில்லை.
 
பகிர்வின் மீதான விளைவுகள்
கடன் பெற்றோர் கடன் வழங்கியோர்
 • பணவீக்க காலத்தில் கடன் பெற்றோர் ஆதாயமும், கடன் வழங்கியோர் இழப்பையும் சந்திக்கின்றனர். எவ்வாறெனில், கடன் வாங்கியபொழுது பணமதிப்பு உயர்வாகவும், பணவீக்க காலத்தில் திருப்பிச் செலுத்தும் பொழுது பணமதிப்பு குறைவாக இருப்பதனால் கடன் வாங்கியோர் ஆதாயம் பெறுகிறார்.
 • இதே காரணத்தால் கடன் வழங்கியோர் கூடுதலான பண மதிப்பு இருக்கும்பொழுது கடன் வழங்கி, பணவீக்க காலத்தில் குறைந்த பண மதிப்பில் பணத்தை மீளப் பெறும்பொழுது இழப்பு ஏற்படுகிறது.
நிலையான வருவாய் பிரிவினர்
 • நிலையான வருவாயை உடைய பிரிவினர் பணவீக்கத்தினால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் ஏனெனில், விலைவாசி உயர்வினால் ஏற்படும் வாழ்க்கைச் செலவு உயர்வுடன், நிலையான வருவாய் பொருந்திச் செல்வதில்லை.
 • (.ம்) ஒரே மாதிரியான மாதச் சம்பளம் அல்லது கூலி பெறுவோர், ஓய்வூதியம் பெறுவோர், வட்டி பெறுவோர், வாடகை பெறுவோர் ஆகியோ மிகவும் பாதிக்கப்படுவர்
 தொழில் முனைவோர்கள் 
 • உற்பத்தியாளர், வணிகர் என்று தொழில் முனைவோர் போன்று எவ்வகையானவராக இருந்தாலும், அவர்களுக்கு பணவீக்கம் ஒரு வரமாகும்
 • ஏனெனில், பணவீக்கம் அவர்களுக்கு ஒரு ஊக்க சக்தியாக விளங்குகிறது.
 • கிடங்கில் இருக்கும் பொருள் இருப்புக்களின் விலையேற்றத்தால் அவர்களுக்கு எதிர்பாரா ஆதாயம் (Windfall gain) கிடைக்கும்.
 முதலீட்டாளர்கள்
 • கடன் பத்திரங்களில் முதலீடு செய்தோருக்கு நிலையான வட்டியை பெறுவதால் அவர்கள் பணவீக்க காலத்தில் இழப்பினை சந்திப்பார்கள்.
 • மாறாக, பங்கு முதலீட்டாளர்கள் நல்ல இலாப ஈவு மற்றும் பங்கு மதிப்பேற்றம் போன்ற ஆதாயங்களை பெறுவார்கள்.
Inflation
 • Inflation is a consistent and appreciable rise in the general price level. In other words, inflation is the rate at which the general level of prices for goods and services is rising and consequently the purchasing power of currency is falling
The main causes of inflation in India are as follows:
Increase in Money Supply: 
 • Inflation is caused by an increase in the supply of money which leads to an increase in aggregate demand.
 • The higher the growth rate of the nominal money supply, the higher is the rate of inflation.
Increase in Disposable Income: 
 • When the disposable income of the people increases, it raises their demand for goods and services.
 • Disposable income may increase with the rise in national income or reduction in taxes or reduction in the saving of the people.
Increase in Public Expenditure: 
 • Government activities have been expanding due to developmental activities and social welfare programmes.
 • This is also a cause for price rise.
Increase in Consumer Spending:
 • The demand for goods and services increases when they are given credit to buy goods on a hire-purchase and instalment basis.
Cheap Money Policy: 
 • A cheap money policy or the policy of credit expansion also leads to an increase in the money supply which raises the demand for goods and services in the economy.
Deficit Financing: 
 • In order to meet its mounting expenses, the government resorts to deficit financing by borrowing from the public and even by printing more notes.
 • This raises aggregate demand in relation to aggregate supply, thereby leading to an inflationary rise in prices.
Black Assests, Activities and Money: 
 • The existence of black money and black assets due to corruption, tax evasion etc., increase the aggregate demand. People spend a lot of money, lavishly.
 • Black marketing and hoarding reduce the supply of goods. These trends tend to raise the price level further.
Repayment of Public Debt: 
 • Whenever the government repays its past internal debt to the public, it leads to an increase in the money supply with the public.
 • This tends to raise the aggregate demand for goods and services.
Increase in Exports: 
 • When exports are encouraged, the domestic supply of goods decline. So prices rise.
Effects of Inflation
The effects of inflation can be classified into two heads:
 • Effects on Production and
 • Effects on Distribution.
Effects on Production:
 • When inflation is very moderate, it acts as an incentive to traders and producers.
 • This is particularly prior to full employment when resources are not fully utilized.
 • The profit due to rising prices encourages and induces business classes to increase their investments in production, leading to the generation of employment and income.
 • However, hyper-inflation results in a serious depreciation of the value of money and it discourages savings on the part of the public.
 • When the value of money undergoes considerable depreciation, this may even drain out the foreign capital already invested in the country.
 • With reduced capital accumulation, the investment will suffer a serious setback which may have an adverse effect on the volume of production in the country.
 • This may discourage entrepreneurs and businessmen from taking business risk.
 • Inflation also leads to hoarding of essential goods both by the traders as well as the consumers and thus leading to a still higher inflation rate.
 • Inflation encourages investment in speculative activities rather than productive purposes.
Effects on Distribution
Debtors and Creditors: 
 • During inflation, debtors are the gainers while the creditors are losers.
 • The reason is that the debtors had borrowed when the purchasing power of money was high and now repay the loans when the purchasing power of money is low due to rising prices.
Fixed-income Groups: 
 • The fixed-income groups are the worst hit during inflation because their incomes being fixed do not bear any relationship with the rising cost of living.
 • Examples are wage, salary, pension, interest, rent etc.
Entrepreneurs: 
 • Inflation is a boon to the entrepreneurs whether they are manufacturers, traders, merchants or businessmen because it serves as a tonic for business enterprise.
 • They experience windfall gains as the prices of their inventories (stocks) suddenly go up.
Investors: 
 • The investors, who generally invest in fixed interest yielding bonds and securities have much to lose during inflation. 
 • On the contrary, those who invest in shares stand to gain by rich dividends and appreciation in the value of shares.