GROUP 1 முதன்மை தேர்வுக்கு தயார் செய்வது எப்படி? PAPER 1

Group 1 Mains Exam Revision Questions 2021

 

COACHING CENTER சென்று முதன்மை தேர்வுக்கு பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கான வழிகாட்டல் பகுதியே இந்த கட்டுரை பகுதி.
இந்த கட்டுரையில் முதல் தாளை எப்படி  அணுகுவது என்பதை பார்ப்போம்.
அடுத்தடுத்த கட்டுரையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் தாள்களை பற்றி பார்ப்போம்.
முதல் தாள் மொத்தம் மூன்று பகுதிகளை கொண்டது.

முதல் தாளுக்கான SYLLABUS PDF DOWNLOAD

முதல் தாள் முதல் பகுதி
இந்தியா விடுதலை போராட்ட வரலாறும் அதில் தமிழ்நாட்டின் பங்கும்
ஐரோப்பியர் வருகை முதல் விடுதலை வரை மற்றும் விடுதலைக்கு பின் இந்தியா (இதே காலகட்டத்தில் தமிழகத்தின் நிலையையும் வாசிக்க வேண்டும்).
இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் முக்கிய ஆளுமைகளை பற்றி சிறிய அளவிலான குறிப்புகளை எடுத்து வைத்து கொள்வது நல்லது.
12ம் வகுப்பு புத்தகம் போதுமானது அல்ல.
இந்திய விடுதலை போராட்ட வரலாறு – க.வெங்கடேசன் புத்தகம் கட்டாயம் தேவை.
பெரும்பாலான கேள்விகள் அதில் இருந்தே கேட்கப்படுகின்றது.
ஆங்கில வழியில் பயில்வோருக்கு பிபின் சந்திரா புத்தகத்தை விட SPECTRUM புத்தகமே பரிந்துரைக்கப்படுகிறது.

 

படிக்கவேண்டிய புத்தகங்கள்

 

தமிழ் வழியில் எழுதுபவர்கள்
12ம் வகுப்பு இந்திய வரலாறு DOWNLOAD PDF
இந்திய விடுதலை போராட்ட வரலாறு – க.வெங்கடேசன் புத்தகம்

 

 

 

ஆங்கில வழியில் எழுதுபவர்களுக்கு
12 MODERN HISTORY DOWNLOAD PDF
SPECTRUM BOOK PDF
SPECTRUM BOOK

 

 

முதல் தாள் இரண்டாம் பகுதி
இந்தியா மற்றும் தமிழ் நாட்டில் சமுதாய பிரச்சனைகள்
மக்கள்தொகை வெடிப்பு,வறுமை,வேலையின்மை,பெண்கள் முன்னேற்றம்,குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி, நகரமயமாதல், இனவாதம்,மதவாதம்,தீவிரவாதம் போன்றவற்றை பற்றியே கேள்விகள் இடம் பெரும்.
இந்த பகுதியில் கேட்க வாய்ப்புள்ள பெரும்பாலான கேள்விகள் மாதிரி வினா விடை விடை வடிவில் upsctamil.com தளத்தில் கொடுக்கப்படும்.

 

படிக்கவேண்டிய புத்தகங்கள்

 

தமிழ் வழியில் எழுதுபவர்கள்     PDF MATERIAL UPDATED SOON
ஆங்கில வழியில் எழுதுபவர்களுக்கு —  Social Problem in India by RAM AHUJA book.

\

 

 

முதல் தாள் முன்றாம் பகுதி
SSLC தரத்திலான கணித பகுதி.
Shortcut பயன்படுத்தி விடை கொண்டுவர கூடாது.
முதன்மைத் தேர்வில் மிக முக்கியமான பகுதி இதுவாகும்
மற்ற பகுதிகளில் எவ்வளவு முயன்றாலும் முழுமைக்கும் முழு மதிப்பெண் என்பது சாத்தியமில்லை .
ஆனால் இந்த பகுதியில் மட்டுமே அது சாத்தியமாகும் இந்த பகுதியில் முழு மதிப்பெண் பெற்றவர்களில் வெற்றி வாய்ப்பை பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
இந்த பகுதியை அணுகுமுறை அதாவது பள்ளி பத்தாம் வகுப்பு கணித தேர்வை எழுதுவது போல் ஒவ்வொரு STEP-பாக விடையை SOLVE செய்து கொண்டே வர வேண்டும்.
நம்முடைய Shortcut உபயோகப்படுத்தி விடை கொண்டு வந்தால் முழு மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது.
தகவல் தொழில்நுட்பம் பற்றிய அடிப்படை தகவல்களை குறிப்பு எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

 

படிக்கவேண்டிய புத்தகங்கள்

 

தமிழ் வழியில் எழுதுபவர்கள்
6-10 வகுப்பு புத்தகங்களே போதுமானது.
நேரம் குறைவாக இருப்பவர்கள் தமிழ் வழியில் கணியன் புத்தகமும் ஆங்கில வழியில் பயில்பவர்கள் FASTRACK புத்தகமும் உதவும்.
தேவையான தலைப்புகள் மட்டும் (SYLLABUS ல் உள்ளது) போதுமானது.

 

 

 

 

ஆங்கில வழியில் எழுதுபவர்களுக்கு

 

 

 

1 thought on “GROUP 1 முதன்மை தேர்வுக்கு தயார் செய்வது எப்படி? PAPER 1”

Comments are closed.