முதலமைச்சரின் அதிகாரங்கள்

 

முதலமைச்சர் மாநில நிர்வாகத்தின் தலைவராக இருக்கிறார். அவர் அதிகமான பணிகளையும், அதிகாரங்களையும் பெற்றுள்ளார். முதலமைச்சரின் பணிகளும் அதிகாரங்களும் பின்வருமாறு
அ. அமைச்சரவை தொடர்பானவை
ஆ ஆளுநர் தொடர்பானவை
இ. மாநில சட்டத்துறை தொடர்பானவை
ஈ மற்ற பணிகளும் அதிகாரங்களும்

அமைச்சரவை தொடர்பானவை

அமைச்சரவையின் தலைவராக, முதலமைச்சர் பின்வரும் பணிகளையும் அதிகாரங்களையும் செயல்படுத்துகிறார்.
ஆளுநரால் அமைச்சர்களாக நியமிக்கப்படும் நபர்களை முதலமைச்சர் பரிந்துரைக்கிறார்.
அவர் அமைச்சர்களிடையே இலாக்காக்களைப் பகிர்ந்தளிக்கிறார். அவர் அமைச்சரவையை மாற்றியமைக்கிறார் மற்றும் மறுமாற்றமும் செய்கிறார்.
கருத்து வேறுபாட்டின் காரணமாக அவர் ஒரு அமைச்சரை ராஜினாமா செய்ய வேண்டுகிறார் அல்லது அவரை அமைச்சரவையிலிருந்து பதவி விலக்க ஆளுநருக்கு ஆலோசனைக் கூறுகிறார்.
அவர் அமைச்சரவை கூட்டங்களுக்குத் தலைமை வகிக்கிறார் மற்றும் அதன் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்துகிறார். அவர் தனது பதவியை இராஜினாமா செய்வதன்மூலம் அமைச்சரவையை முடிவுக்குக் கொண்டுவரலாம். மற்றும் அவர் அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகளை வழிநடத்துகிறார், இயக்குகிறார், கட்டுப்படுத்துகிறார் மற்றும் ஒருங்கிணைக்கிறார்.

ஆளுநர் தொடர்பானவை

 

விதி 167-ன்படி ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் இடையிலான தொடர்பின் பிரதான வழியாக முதலமைச்சர் உள்ளார். மற்றும்

பின்வரும் அலுவலர்களின் நியமனம் தொடர்பாக ஆளுநருக்கு அவர் ஆலோசனை கூறுகிறார்.
மாநில தலைமை வழக்கறிஞர்
மாநில தேர்தல் ஆணையர்
மாநில பொதுப்பணி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்.
மாநில திட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
உ மாநில நிதி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்.

மாநில சட்டத்துறைத் தொடர்பானவை.

மாநில சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டுவது மற்றும் தள்ளிப்போடுவது தொடர்பாக முதலமைச்சர் ஆளுநருக்கு ஆலோசனை கூறுகிறார்.
சபையில் அரசாங்கக் கொள்கைகளை அவர் அறிவிக்கிறார்.
சட்ட சபையில் அவர் மசோதாக்களை அறிமுகம் செய்யலாம். மற்றும்
எந்த நேரத்திலும் சட்ட சபையைக் கலைப்பதற்காக ஆளுநரிடம் அவர் பரிந்துரை செய்யலாம்.
மற்ற பணிகளும் அதிகாரங்களும்
ஆளுங்கட்சியின் தலைவராக, கட்சியைக் கட்டுப்படுத்தவும், நன்னெறிகளை வளர்க்கவும், முதலமைச்சர் கடமைப்பட்டுள்ளார்.
மாநிலத்தின் தலைவராக, பல்வேறு பிரிவு மக்களின் கோரிக்கைகளைக் கவனமாக பரிசீலிக்கவும் அவர் கடமைப்பட்டவர்.
பல்வேறு பணிகளின் அரசியல் தலைவராக, மாநில அளவில் உள்ள பல்வேறு துறைகளின் செயலர்களை மேற்பார்வையிடவும், கட்டுப்படுத்தவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் அவர் கடமைப்பட்டவர்.
மாநில அரசின் சீரான செயல்பாடு மற்றும் சிறந்த மத்திய – மாநில உறவுகளுக்காக, மத்திய அரசாங்கத்துடன் ஒரு நல்லுறவை வளர்க்க அவர் கடமைப்பட்டவர். மற்றும்
அமைச்சரவையின் அளவு முதலமைச்சரால் தீர்மானிக்கப்படுகிறது. எனினும், சமீபத்திய அரசியலமைப்புத் திருத்தத்திற்கிணங்க, சட்டசபை உறுப்பினர்களின் 15 சதவிகித்தை மட்டுமே அவர் அமைச்சர்களாக்க முடியும்.

இவ்வாறாக, மாநில நிர்வாகத்தில் மிக முக்கியமான மற்றும் உயர்ந்த பங்கில் முதலமைச்சர் செயல்படுகிறார். இருப்பினும், ஆளுநர் சிறப்பு நிலையைப் பெற்றுள்ள மாநிலங்களில் அவரின் தன்விருப்ப அதிகாரங்கள் முதலமைச்சரின் பங்கு மற்றும் முக்கியத்துவத்தை சிறிதளவு குறைத்துள்ளன. ஆனால், தமிழ்நாடு போன்ற அமைச்சரவை உறுதிப்பாடுள்ள மாநிலங்களில் அவ்வாறு இருக்கமுடியாது.

பெயரளவுத் தலைவராக இருக்கிறார் மற்றும் மாநில அரசாங்கத்தின் உண்மையான அதிகாரம் அமைச்சரவையிடம் உள்ளது. ஆளுநர் தன் விருப்ப அதிகாரங்களைப் பெற்றுள்ள போதிலும், அவர் எப்போதாவது அவைகளைச் செயல்படுத்துகிறார். ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, ஆளுநர் முதலமைச்சரை நியமிக்கிறார் மற்றும் அவரின் பரிந்துரையின்பேரில் மற்ற அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். அமைச்சர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட பதவிக்காலம் இல்லை. மேலும் அவர்கள் ஆளுநரின் விருப்பம் உள்ளவரைப் பதவி வகிப்பர். இருப்பினும், அமைச்சர்களின் இயல்பான பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். அவ்வப்போது மாநில சட்டத்துறையால் அமைச்சர்களின் சம்பளங்களும் படிகளும் நிர்ணயிக்கப்படுகின்றன.

மத்திய அரசாங்கத்தில் உள்ளதைப் போல மாநிலங்களில் பாராளுமன்ற அரசாங்கமுறை பின்பற்றப்படுவதால், அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் மாநிலச் சட்ட சபைக்கு பொறுப்புடையவர்களாக உள்ளனர். அமைச்சர்கள் சட்ட சபையில் உறுப்பினர்களாகவும் உள்ளனர். அதன் விளைவாக, அமைச்சர்கள் ஒரு குழுவாக செயல்படுகின்றனர். ‘ஒருவருக்காக அனைவர் மற்றும் அனைவருக்காக ஒருவர்” என்ற கொள்கை அமைச்சரவையின் செயல்பாட்டில் பணிபுரிகிறது. அமைச்சரவையின் கூட்டு முடிவிலிருந்து ஒரு அமைச்சர் தன்னைப் பிரிக்க முடியாது. சட்டசபையின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும்வரை அமைச்சரவை அதிகாரத்தில் இருக்கிறது. சட்ட சபையில் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், முதலமைச்சரால் தலைமை வகிக்கப்படும் அமைச்சரவை இராஜினாமாவை சமர்பிக்க கடமைப்பட்டுள்ளது. இதற்குக் கூட்டுப் பொறுப்பு என்று பெயர்.

அமைச்சரவையின் அளவு தொடர்பாக, இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஒரேமாதிரியாக இல்லை. நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் (ARC) பின்வருமாறு கூறியுள்ளது. “பல்வேறு மாநிலங்களில் உள்ள நிர்வாகத் தேவைகளைப் பரந்த நோக்கில் கணக்கில் எடுத்துக்கொண்டு, உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரம் போன்ற பெரிய மாநிலங்களில் கிட்டத்தட்ட 20 நபர்களை அமைச்சரவையில் பெற்றிருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம். மதராஸ் (தற்போது தமிழ்நாடு), கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசம் போன்ற நடுத்தர அளவிலான மாநிலங்கள் 14 முதல் 18 வரை அமைச்சர்கள் இருக்கலாம். கேரளா, ஹரியானா மற்றும் பஞ்சாப் போன்ற சிறிய மாநிலங்கள் 8 முதல் 12 வரை அமைச்சர்களைப் பெற்றிருக்கலாம். இருப்பினும், அமைச்சரவையில் அளவு, தொடர்புடைய மாநில முதலமைச்சரைச் சார்ந்துள்ளது. ஆனால், சமீபகால அரசியலமைப்புத் திருத்ததிற்கிணங்க, மாநில சட்டசபையின் மொத்த உறுப்பினர்களின் 15 சதவிகிதத்திற்கு மேல் அமைச்சர்களின் எண்ணிக்கை செல்லக்கூடாது. ஒவ்வொரு அமைச்சரும் மாநில சட்டசபையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். இல்லையென்றால், ஆறு மாதத்திற்குள் அதன் உறுப்பினராக. தமிழ்நாட்டில் சட்டசபை பலத்திற்கேற்ப (234 உறுப்பினர்கள்) அமைச்சர்களின் எண்ணிக்கை 36 வரை, அதாவது 234ன் 15 சதவிகிதம் இருக்கலாம்.