கருந்துளை என்றால் என்ன? / WHAT IS MEAN BY BLACK HOLE ?

 

[the_ad id=”5123″]

REFERENCE

TAMIL

VIDEO IN TAMIL

ENGLISH

கருந்துளை என்றால் என்ன?

[the_ad id=”2159″]

பூமியின் தரைப்பரப்பிலிருந்து ஒருபொருளை சுமார் நொடிக்கு 11.2 கிமீ என்ற வேகத்தில் எறிந்தால் அந்தப் பொருள் பூமியின் ஈர்ப்பு விசையை மீறி வெளியேறிவிடும். இதுவே பூமியின் விடுபடு வேகம்.
பூமியைவிட பருத்த வியாழன் கோளில் இது 59.5 km/sec. குறிப்பிட்ட திணிவு கொண்ட பொருளில் விடுபடு வேகம் ஒளியின் வேகத்தைவிட மிஞ்சும் என ஜான் மிச்சல் (John Mitchell) எனும் ஆங்கிலேயே அறிஞர் 1783இல் நியூட்டன் இயற்பியலைக் கொண்டு கணிதம் செய்தார். இதுவே கருந்துளைகளின் துவக்க ஆய்வு.
அதன் பின்னர் பிரெஞ்சு அறிவியல் அறிஞர் பியர் சிமோன் லாப்பிளாஸ் (Pierre-SimonLaplace)ஆறு கிலோமீட்டர் விட்ட பந்து அளவில் சூரியனின் மொத்தநிறையையும் அடைத்துவிட்டால் ஏற்றப்படும் ஈர்ப்பு புலத்தில் ஒளி கூட வெளியே வர முடியாது என்று கணிதம் செய்தார்.
எனினும் இருபதாம் நூற்றாண்டில்தான் இந்தக் கருத்து தீவிர ஆய்வுக்கு உட்பட்டது. ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் தத்துவத்தின் தொடர்ச்சியாக கார்ல் சுவார்ட்ஷில்ட் (Karl Schwarzschild) 1916 இல் கருந்துளைகள் என்கிற வினோத வான்பொருள் ஏற்படலாமென யூகம் செய்தார். அவரைத் தொடர்ந்து 1958இல் டேவிட் ஃபிங்கல்ஸ்டீன் (David Finkelstein) என்பார் கருந்துளைக்குள் என்ன சென்றாலும் திரும்ப வராது என்று நிறுவினார்.
1967இல் ஜான் வீலர் (John Wheeler) எனும் இயற்பியலாளர் ‘கருந்துளை’ (blackhole) என்ற பெயரை பிரபலப்படுத்த அதுவே நிலைத்துவிட்டது. எனினும் சாமானியர்களும் கருந்துளைகள் குறித்து கேள்விப் படவைத்த பெருமை கருந்துளை நாயகன் ஸ்டீபன் ஹாகிங்கைதான் சாரும்.

[the_ad id=”5123″]

What is Black holes

Black holes are volumes of space where gravity is extreme enough to prevent the escape of even the fastest moving particles. Not even light can break free, hence the name ‘black’ hole.

A German physicist and astronomer named Karl Schwarzschild proposed the modern version of a black hole in 1915 after coming up with an exact solution to Einstein’s approximations of general relativity.

It’s generally accepted that stars with a mass at least three times greater than that of our Sun’s can undergo extreme gravitational collapse once their fuel depletes.

With so much mass in a confined volume, the collective force of gravity overcomes the rule that usually keeps the building blocks of atoms from occupying the same space. All this density creates a black hole.

For decades, black holes were exotic peculiarities of general relativity. Physicists have became increasingly confident in their existence as other extreme astronomical objects, such as neutron stars, were discovered. Today it’s believed most galaxies have monstrous black holes at their core.

[the_ad id=”2159″]

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.

1 thought on “கருந்துளை என்றால் என்ன? / WHAT IS MEAN BY BLACK HOLE ?”

Comments are closed.