எதிர்கால இந்தியா அறிவியலில் இருந்து படைக்கப்படும். நாட்டின் நலனுக்காக நாம் இளைஞர்களைச் சீரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள இஸ்ரோ சார்பில் இளம் விஞ்ஞானி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
BODY
1.இதில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 3 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.அதாவது 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் இருந்து தலா மூவர் தேர்வு செய்யப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை இஸ்ரோவுக்கு அழைத்துச் செல்வோம். அவர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். அதன் மூலம் சிறிய செயற்கைக்கோளை உருவாக்குவது குறித்து நேரடி அனுபவத்தைப் பெற முடியும். வெற்றிகரமாக உருவாக்கப்படும் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும்.
2.அந்த மாணவர்கள் இஸ்ரோவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று, விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடலாம். ஒரு மாதம் இந்தப் பயிற்சி அளிக்கப்படும். இதற்கு ISRO உதவும்.
3.விண்ணில் ஏவப்பட்டு, வெற்றிகரமாக தன் வேலையை முடித்த செயற்கைக்கோளை அழிப்பதற்குப் பதிலாக, அதை மாணவர்களுக்கு சோதனைத் தளமாக மாற்ற முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் மாணவர்கள் செயற்கைக்கோள் குறித்து பிராக்டிகலாக, அதே நேரத்தில் இலவசமாகப் படிக்க முடியும்.
4.இஸ்ரோவின் நேரடிக் கண்காணிப்பில் திரிபுரா, திருச்சி, நாக்பூர், இந்தூர் மற்றும் ரூர்கேலா ஆகிய பகுதிகளில் பயிற்சி மற்றும் வளர்ச்சி மேம்பாட்டு மையம் (விண்வெளி ஆய்வு மையம்) அமைக்கப்படும்
ENGLISH
1.ISRO will select over 100 students from across India and give them practical experience of how satellites are built under the new Young Scientist Programme.
2.Mostly class 8 students – three each from 29 states and seven Union territories will be selected for the one month programme during which they will visit ISRO centres, interact with senior scientists, and will have access to research and development facilities.
3. All the expenses of travelling and boarding will be funded entirely by ISRO.
4.Six incubation centres will be established in various parts of the country – North, South, East, West, Centre and North-East, and the first such centre has been established in Agartala in Tripura. The students will be able to use these centres for R&D purposes.
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.