இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்குக. / Explain the powers and functions of the President of India.

குடியரசுத்தலைவர்
 • குடியரசுத்தலைவர் பதவி என்பது பெயரளவு நிர்வாக அதிகாரம் கொண்ட பதவியாகும்.
 • இந்திய ஒன்றியத்தின் தலைலை நிர்வாகி குடியரசுத்தலைவர் ஆவார்.
 • அவர் இந்தியாவின் முதல் குடிமகனாவார்.
குடியரசுத்தலைவரின் அதிகாரங்கள்
நிர்வாக அதிகாரங்கள்
 • சரத்து 77, ஒன்றியத்தின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத்தலைவரின் பெயரிலேயே எடுக்கப்பட வேண்டும்.
 • பிரதமரையும், அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்களையும் நியமித்து, பிரதமரின் ஆலோசனையின் பேரில் அவர்களுக்கு இலாக்காக்களை நிர்ணயிக்கிறார்.
சட்ட அதிகாரங்கள்
 • பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் உரையாற்றுவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முதல் கூட்டத்தின் தொடக்கத்திலும் குடியரசுத்தலைவர் உரை நிகழ்த்தி அதைத் தொடங்கி வைக்கிறார்.
 • குடியரசுத்தலைவர் ஒரு ஆண்டில் குறைந்தது இரண்டு முறையாவது பாராளுமன்றக் கூட்டத்தை கூட்டுகிறார் .
நிதி அதிகாரங்கள்
 • மத்திய அரசின் வருடாந்திர நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர், மக்களவை முன் குடியரசுத்தலைவரின் அனுதியுடன் மட்டுமே  முன்வைக்கிறார்.
நீதி அதிகாரங்கள்
 • 72ஆவது சரத்தானது மன்னிப்பு வழங்குவதற்கும், தண்டிப்பதற்கும், அல்லது ஒரு குற்றத்திற்காக தண்டனை பெற்ற எந்தஒரு நபரின் தண்டனையையும் மாற்றுவதற்கான அதிகாரத்தையும் குடியரசுத்தலைவருக்கு அளிக்கிறது.
இராணுவ அதிகாரங்கள்
 • சரத்து 53 (2) ஆனது “ஒன்றியத்தின் பாதுகாப்புப் படையின் தலைவர் குடியரசுத்தலைவர் என்றும் அப்படைகளின் மீதான அதிகாரம் சட்ட வரம்புக்கு உட்பட்டது” என்றும் குறிப்பிடுகிறது.
இராஜதந்திர அதிகாரங்கள்
 • குடியரசுத்தலைவர் இந்திய இராஜதந்திரிகளை மற்ற நாடுகளுக்கும், வெளிநாட்டு தூதர்களை இந்தியாவுக்கும் நிர்ணயிக்கும் பணியை  மேற்கொள்கிறார்.
 • வெளிநாடுகளுடனான அனைத்து ஒப்பந்தங்களும் குடியரசுத்தலைவரின் பெயரிலேயே கையெழுத்தாகின்றன.
அவசரநிலை பிரகடனம் செய்யும் அதிகாரங்கள்
 • சரத்து 352 இன் கீழ் தேசிய அவசரநிலையையும், 356வது சரத்தின் கீழ் மாநிலங்கள் மீதான அவசரநிலைலயயும், 360வது சரத்தின் கீழ் நிதி அவசரநிலைலயயும் அறிவிக்க அரசியைலைப்பானது குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

 

The President of India:
 • The President is the nominal executive authority. The chief executive of the Indian union is the President.
 • He is designated as the first citizen of India.
Powers of the President
Executive Powers
 • Article 77 requires that every executive action of the Union shall be taken in the name of the President.
 • He appoints the Prime Minister and the other members of the Council of Ministers, distributing portfolios to them on the advice of the Prime Minister.
Legislative Powers
 • President inaugurates the session of the Parliament by addressing it after the general election and also at the beginning of the first session each year.
 • The President summons Parliament at least twice a year.
Financial Power
 • The annual budget of the Central Government is presented before the Lok Sabha by the Union Finance Minister only with the permission of the President.
Judicial Powers
 • Article 72 confers on the President power to grant pardons, reprieves, respites or remissions of punishment, or to commute the sentence of any person convicted of an offence.
Military Powers
 • Article 53(2) lays down that “the supreme command of the Defence Force of the Union shall be vested in the President and the exercise thereof shall be regulated by law”.
Diplomatic Powers
 • The President appoints Indian diplomats to other countries and receives foreign diplomats posted to India.
 • All treaties and agreements with foreign States are entered into, in the name of the President
Emergency Powers
 • The President has been empowered by the Constitution to proclaim National Emergency under Article 352, State Emergency under Article 356, Financial Emergency under Article 360.