இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல்- வரலாற்று பின்னணி என்ன? / Israel- Palestine conflict- Historical Background – Explain

இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல்- வரலாற்று பின்னணி:
 • ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, ஜோர்டான் நதிக்கும் மத்திய தரைக்கடல் கடலுக்கும் இடையிலான ஒரு நிலப்பரப்பில் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது.
 • 1882 மற்றும் 1948 க்கு இடையில், உலகம் முழுவதிலுமிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்தில் கூடினர்.
 • இந்த இயக்கம் அலியாஸ் எனப்பட்டது.
பால்ஃபோர் பிரகடனம்
 • முதலாம் உலகப் போருக்குப் பிறகு, ஒட்டோமான் பேரரசு 1917 இல் வீழ்ந்தது , பிரிட்டிஷ்காரர்கள் பாலஸ்தீனத்தின் இறையாண்மையைக் கைப்பற்றினர்.
 • யூத சிறுபான்மையினரும் அரபு பெரும்பான்மையினரும் அந்த பகுதியில் வாழ்ந்தனர்.
 • பிரிட்டன் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தில் ஒரு யூத தாயகத்தை நிறுவுவதற்கான குறிக்கோளுடன் பால்ஃபோர் பிரகடனத்தால் செய்யப்பட்டது.
 • அந்த நேரத்தில், பாலஸ்தீனத்தில் அரேபியர்கள் பெரும்பான்மையாக இருந்தனர்.
 • இந்த திட்டத்தை யூதர்கள் ஆதரித்தனர், ஆனால் அதை பாலஸ்தீனியர்கள் எதிர்த்தனர்.
 • எனவே இந்த நிகழ்வு பெரும் வன்முறைக்கு வித்திட்டது.
 • இந்த வன்முறையில் கிட்டத்தட்ட 6 மில்லியன் யூதர்களின் உயிரைக் கொல்லப்பட்டனர்
 • எனவே ,இந்த நிகழ்வு ஒரு தனி யூத நாட்டிற்கான அழைப்பை தூண்டியது.
 • யூதர்கள் பாலஸ்தீனத்தை தங்கள் இயற்கையான வீடு என்று கூறினர், அதேசமயம் அரேபியர்கள் இப்பகுதியை கைவிடவில்லை.
 • யூதர்களுக்கு சர்வதேச சமூகம் ஆதரவளித்தது.
 • பாலஸ்தீனத்தை தனி யூத மற்றும் அரபு அரசாங்கங்களாக பிரிக்க ஐக்கிய நாடுகள் சபை 1947 இல் ஒப்புக் கொண்டது, ஜெருசலேம் ஒரு சர்வதேச நகரமாக அங்கீகரிக்க யோசனை கூறப்பட்டது.
 • அந்த யோசனை யூத அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டது, ஆனால் அது அரபு தலைவர்களால் நிராகரிக்கப்பட்டது, எனவே அது ஒருபோதும் செயல்படத்தபடவில்லை.
 இஸ்ரேலின் பிறப்பு:

 

 • பிரிட்டன் 1948 இல் இப்பகுதியின் கட்டுப்பாட்டை கைவிட்டது, யூதர்கள் இஸ்ரேலை நிறுவுவதாக அறிவித்தனர். பாலஸ்தீனிய எதிர்ப்புகள் இருந்தபோதிலும், யூதர்கள் பின்வாங்க மறுத்துவிட்டனர், இதன் விளைவாக வன்முறை யுத்தம் ஏற்பட்டது.
 • சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த அரேபியர்களும் படையெடுத்தனர் எனவே இஸ்ரேலிய துருப்புக்களால் தாக்கப்பட்டனர்.
 • இதன் விளைவாக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அல்-நக்பா, அல்லது “பேரழிவு” என்பது இந்த நிகழ்வுக்கு வழங்கப்பட்ட பெயர்.
 • இதற்குப் பிறகு, இஸ்ரேல்அந்த பகுதியின் மீது முழு அதிகாரத்தையும் செலுத்தியது.
 • ஜோர்டான் பின்னர் இஸ்ரேலுடன் போருக்குச் சென்றது.மேற்குக் கரை (WEST BANK) பகுதியைக் கைப்பற்றியது.;
 • அதே நேரத்தில் எகிப்து காசாவை கைப்பற்றியது.
 • ஜெருசலேம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது, ஒன்று மேற்கிலும் மற்றொன்று கிழக்கிலும்.
 • எவ்வாறாயினும், முறையான சமாதான உடன்படிக்கை எதுவும் செய்யப்படவில்லை.
 • மேலும் ஒவ்வொரு தரப்பினரும் பதட்டத்திற்கு ஒருவரையொருவர் தொடர்ந்து குற்றம் சாட்டினர், இதன் விளைவாக பல  போர்கள் நடந்தன.
 • 1967 ஆம் ஆண்டில், இஸ்ரேலிய படைகள் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரையையும், சிரியாவின் கோலன் ஹைட்ஸ், காசா மற்றும் எகிப்தின் சினாய் தீபகற்பத்தின் பிற பகுதிகளையும் கைப்பற்றின.
இப்போது நிலைமை:

 

 • இஸ்ரேல் மேற்குக் கரையை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது, இஸ்ரேல் படைகள் காசா பகுதியை கைவிட்ட போதிலும் காசாவை ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தின் ஒரு பகுதியாக ஐ.நா இன்னும் கருதுகிறது.
 • பாலஸ்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேமை வருங்கால பாலஸ்தீனிய அரசின் தலைநகராகக் கருதுகின்றனர்.
 • அதே நேரத்தில் இஸ்ரேல் முழு ஜெருசலேம் நகரத்தையும் அதன் தலைநகராகக் கருதுகிறது.
 • அமெரிக்கா உட்பட ஒரு சில நாடுகள் மட்டுமே முழு ஜெருசலேம் நகரத்தையும் இஸ்ரேலுடையது என   அங்கீகரிக்கின்றன.
இப்போது என்ன நடக்கிறது?

 

 • கிழக்கு ஜெருசலேம், காசா மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே பதற்றம் அடிக்கடி அதிகமாக உள்ளது.
 • காசா ஹமாஸ் பாலஸ்தீனிய போராளிக்குழுவின் தலைமையின் கீழ் உள்ளது. அந்தக்குழு இஸ்ரேலை பலமுறை தாக்கி உள்ளது.
 • ஆயுதங்கள் ஹமாஸை அடைவதைத் தடுக்க இஸ்ரேலும் எகிப்தும் காசாவின் எல்லைகள் மீது கடுமையான கட்டுப்பாட்டைக் மேற்கொண்டுள்ளன.
 • காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தங்களுக்கு வேதனையை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.
 • பாலஸ்தீன வன்முறைக்கு எதிராக தற்காப்பு நடவடிக்கையில்தான் செயல்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது.
 • 2021 ஏப்ரல் நடுப்பகுதியில் புனித முஸ்லீம் மாதமான ரமலான் மாதம் தொடங்கியதிலிருந்து, காவலர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களிடையே இரவு மோதல்கள் ஏற்பட்டதால், பிரச்னை மேலும் மோசமாகிவிட்டன.
 • கிழக்கு ஜெருசலேமில் சில பாலஸ்தீனிய குடும்பங்களை வெளியேற்றுதல் மேலும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது.

 

Israel- Palestine conflict- Historical Background:

 

 • For more than a century, Jews and Arabs have been at odds over a strip of territory between the Jordan River and the Mediterranean Sea.
 • Between 1882 and 1948, Jews from all over the world congregated in Palestine.
 • Aliyahs was the name given to this movement.
 • After World War I, the Ottoman Empire crumbled in 1917, and the United Kingdom took sovereignty of Palestine.
 • A Jewish minority and an Arab majority lived on the land.
 • Following Britain’s takeover, the Balfour Declaration was made with the goal of establishing a Jewish homeland in Palestine. During that time, however, Arabs were the majority in Palestine.
 • The plan was supported by Jews, but it was opposed by Palestinians. The Holocaust claimed the lives of nearly 6 million Jews, fueling calls for a separate Jewish state.
 • The Jews claimed Palestine as their natural home, whereas the Arabs did not abandon the area.
 • The Jews were supported by the international community.
 • The United Nations agreed in 1947 to divide Palestine into separate Jewish and Arab governments, with Jerusalem designated as an international city.
 • That idea was endorsed by Jewish authorities, but it was rejected by Arab leaders and never put into action.
The ‘Catastrophe’ and the Birth of Israel:

 

 • Britain relinquished control of the region in 1948, and Jews declared the establishment of Israel. Despite Palestinian protests, Jews refused to back down, resulting in a violent battle.
 • Arabs from the surrounding area also invaded and were pummeled by Israeli troops.
 • Thousands of Palestinians were forced to flee their homes as a result of this. Al-Nakba, or “Catastrophe,” was the name given to this event.
 • After this, Israel enjoyed complete authority over the territory.
 • Jordan then went to war with Israel, seizing control of a portion of the region known as the West Bank, while Egypt took control of Gaza.
 • Jerusalem was divided into two parts, one in the west and the other in the east. However, no formal peace treaty was made, and each side continued to blame the other for the tension, resulting in future battles in the region.
 • In 1967, Israeli forces took East Jerusalem and the West Bank, as well as other sections of Syria’s Golan Heights, Gaza, and Egypt’s the Sinai Peninsula.
Situation right now:

 

 • Israel continues to occupy the West Bank, and the UN still considers Gaza to be part of occupied territory despite Israel’s withdrawal.
 • The Palestinians claim East Jerusalem as the capital of a future Palestinian state, while Israel claims the entire city of Jerusalem as its capital.
 • Only a few countries, including the United States, recognise Israel’s claim to the entire city.
What’s going on right now?

 

 • Tensions between Israel and Palestinians in East Jerusalem, Gaza, and the West Bank are frequently high.
 • Gaza is headed by Hamas, a Palestinian militant group that has attacked Israel numerous times.
 • Israel and Egypt maintain strict control over Gaza’s borders in order to prevent weaponry from reaching Hamas.
 • Palestinians in Gaza and the West Bank believe Israeli measures and restrictions are causing them pain.
 • Israel claims it is just acting in self-defence against Palestinian violence.
 • Since the start of the holy Muslim month of Ramadan in mid-April 2021, things have gotten worse, with nightly skirmishes between police and Palestinians.
 • The potential of eviction for certain Palestinian families in East Jerusalem has sparked further outrage.