இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை? அணிசேரா இயக்கத்தில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளை இணைத்ததில் பிரதமர் நேரு அவர்களின் பங்கினை விளக்குக. / What were the basic principles of India’s foreign policy? What role did Prime minister Nehru in organizing the Afro-Asian countries into a non-aligned movement?

இந்திய வெளியுறவுக் கொள்கை
 • சுதந்திர இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படைக் கோட்பாடுகள் இந்தியா விடுதலை அடைவதற்கு குறைந்தது முப்பது ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டன எனலாம்.
 • இந்தக் கோட்பாடு விடுதலைப் போராட்டத்தின்போது படிப்படியாக வளர்ச்சியுற்றது.
 • காலனியம் எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்ப்பது என்பதே இந்தக் கோட்பாட்டின் அடிநாதமாகும்
 • ஜவகர்லால் நேருவே இந்திய வெளியுறவுக் கொள்கையை முதன்மையான சிற்பி ஆவார்
இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள்
 • காலனிய எதிர்ப்பு () ஏகாதிபத்திய எதிர்ப்பு, இன ஒதுக்கலை எதிர்த்தல், இனவெறியை எதிர்த்தல், வல்லரசு நாடுகளுடன் அணி சேராமை, ஆப்பிரிக்கஆசிய ஒற்றுமை, பிறநாடுகளை ஆக்கிரமிக்காமல் இருத்தல், பிறநாடுகளின் உள்நாட்டு நிகழ்வுகளில் தலையிடாமல் இருத்தல், ஒரு நாடு மற்றொரு நாட்டின் இறையாண்மை மற்றும் நில எல்லையை மதித்தல், உலக அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல், நாடுகளுக்கிடையேயான அமைதியை நிலைநிறுத்துவதில் வெற்றிடம் ஏற்படா வண்ணம் இரு நாடுகளும் சமநீதியைப் பாதுகாத்தல்
 • இரண்டாம் உலகப்போருக்குப் பின், அமெரிக்கா (USA) மற்றும் சோவியத் ஒன்றியம் (USSR) ஆகிய இரு வல்லரசு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பனிப்போர் காரணமாக இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு இந்தியா அணிசேராக் கொள்கை மூலம் தீர்வு கண்டது
 • 1954இல் இந்தியா மற்றும் சீனாவிடையே கையெழுத்தான ஒப்பந்தம் சீனாவிற்கு திபெத் மீதிருந்த உரிமையை அங்கீகரித்தது
 • அத்தோடு இந்திய சீன உறவுக்கான கோட்பாடுகளாகப் பஞ்சசீலக் கொள்கையை வகுத்தது
பஞ்சசீலக் கொள்கை
 • இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அவற்றின் நில எல்லை மற்றும் இறையாண்மையை மதித்து நடத்தல்.
 • இரு நாடுகளும் ஒன்றையொன்று ஆக்கிரமிக்காமல் இருத்தல்.
 • ஒரு நாடு மற்றொரு நாட்டின் உள் நிகழ்வுகளில் தலையிடாமல் இருத்தல்.
 • இரு நாடுகளுக்கு இடையேயான சமத்துவம் மற்றும் ஒன்றுக்கொன்று பயனடைவதற்கான கூட்டுறவு.
 • சமாதான சகவாழ்வு.
அணி சேராமை
 • காலனி ஆதிக்கத்தால் பெற்ற துன்பம், அதன் விளைவுகளான வறுமை மற்றும் பின்தங்கிய வளர்ச்சி ஆகிய அனுபவ ஒற்றுமைகளின் காரணமாக இந்தியாவும் சீனாவும் கைகோர்த்து உலகில் ஆசியாவிற்கோர் இடத்தை நிலைநிறுத்த முடியும் என்று நேரு கருதினார்
 • வல்லரசு நாடுகளுடன் கூட்டு சேராதஅணி சேராமைஎன்ற கருத்தாக்கம் வலுப்பெறவும் பாண்டுங் மாநாடு உதவியது
பாண்டுங் மாநாடு
 • மார்ச் 1947இல் டெல்லியில் நேரு ஏற்பாடு செய்த ஆசிய உறவுக்கான மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. ஆசிய நாடுகளின் விடுதலை மற்றும் உலகில் ஆசியாவின் நிலையை உறுதி செய்தல் என்பதே மாநாட்டின் மையக் கருத்தாகும்
 • இத்தகைய மாநாடு மீண்டும் ஒரு முறை டிசம்பர் 1948இல் இந்தோனேசியாவில் மறு காலனியாக்கத்திற்கு உட்படுத்த விரும்பிய, டச்சுக்காரர்களுக்குப் பதில் கூறும் வகையில் நடத்தப்பட்டது
 • காலனி ஆதிக்க நீக்க முயற்சிகள் 1954இல் கொழும்பில் நடைபெற்ற ஆசியத் தலைவர்கள் மாநாட்டில் மேலும் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.
 • இந்த முயற்சிகளின் முத்தாய்ப்பாகவே 1955இல் இந்தோனேசியா நாட்டின் பாண்டுங் நகரில் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது
 • சில ஆண்டுகளுக்குப் பின் பெல்கிரேட் நகரில் இந்த நாடுகள் கூடி அணி சேரா இயக்கத்தைத் தோற்றுவிப்பதற்கான அடித்தளத்தை பாண்டுங் மாநாடு ஏற்படுத்திக் கொடுத்தது
 • சுதந்திர இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் சிற்பியான ஜவகர்லால் நேரு, எகிப்து அதிபர் நாசர் மற்றும் யூகோஸ்லாவியாவின் டிட்டோ ஆகியோருடன் இணைந்து 1961இல் அணுசக்தி ஆயுதக்குறைப்பு மற்றும் சமாதானத்திற்கான அழைப்பு விடுத்தார்
 • அணிசேராமையின் முக்கியத்துவம் மற்றும் உலகத்துக்கு அதன் தேவைகுறித்து நேரு பின்வருமாறு குறிப்பிட்டார்
 • பாசிசம், காலனித்துவம், இனவாதம் அல்லது அணு குண்டு, ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறை போன்ற அனைத்து தீய சக்திகளையும் பொறுத்தவரையில், நாம் மிகவும் உறுதியாகவும் ஐயத்திற்கு இடமின்றியும் அவற்றை எதிர்த்து நிற்கிறோம்
 • பனிப்போர் மற்றும் அதுதொடர்பான இராணுவ ஒப்பந்தங்களிலிருந்து மட்டும் நாங்கள் விலகி நிற்கிறோம்.
 • ஆசிய மற்றும் ஆப்பிரிக்காவின் புதிய நாடுகளைத் தங்களது பனிப்போர் இயந்திரத்துக்குள் கட்டாயப்படுத்தித் தள்ளும் முயற்சிகளை எதிர்க்கிறோம்

 

India’s Foreign Policy 
 • The founding principles of independent India’s foreign policy were, in fact, formulated at least three decades before independence. 
 • It evolved in the course of the freedom struggle and was rooted in its conviction against any form of colonialism. Jawaharlal Nehru was its prime architect.
India’s foreign policy  principles
 • Anti-colonialism, anti-imperialism, anti-apartheid or anti-racism,non-alignment with the superpowers, Afro- Asian Unity, non-aggression, non-interference in other’s internal affairs, mutual respect for each other’s sovereignty and territorial integrity, and the promotion of world peace and security. 
 • The commitment to peace between nations was not placed in a vacuum; it was placed with an equally emphatic commitment to justice. 
 • The context in which India’s foreign policy was formulated was further complicated by the two contesting power blocs that dominated the world in the post-war scenario: the US and the USSR. Independent India responded to this with non-alignment as its foreign policy doctrine.
 • In 1954, India and China signed a treaty in which India recognized China’s rights over Tibet and the two countries placed their relationship within a set of principles, widely known since then as the principles of Panch Sheel.
Panch Sheel (five virtues)
 • Mutual respect for each other’s territorial integrity and sovereignty
 • Mutual non-aggression
 • Mutual non-interference in each other’s internal affairs
 • Equality and cooperation for mutual benefit
 • Peaceful co-existence
Non-alignment
 • India’s contribution to the world, however, was not restricted to its relationship with China and the Panch Sheel. 
 • It was most pronounced and lasting in the form of non-alignment and its concretisation at the Bandung Conference.
Bandung Conference
 •  In March 1947, Nehru organised the Asian Relations Conference, attended by more than twenty countries. 
 • The theme of the conference was Asian independence and assertion on the world stage. 
 • Another such conference was held in December 1948 in specific response to the Dutch attempt to re-colonize Indonesia. 
 • The de-colonization initiative was carried forward further at the Asian leaders’ conference in Colombo in 1954, culminating in the Afro- Asian Conference in Bandung, Indonesia, in 1955. 
 • The Bandung Conference set the stage for the meeting of nations at Belgrade and the birth of the Non-Aligned Movement.