“ What to Study to become an I.A.S. Officer ? ” /“ஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்?”

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களின் கேள்விகளும், ஐ.ஏ.எஸ் இளம் பகவத்தின் A – Z பதில்களும்! #VikatanExclusive #FAQ

நன்றி : விகடன்

 

“ஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்?”

  • “ஐ.ஏ.எஸ் ஆக, பட்டப்படிப்பை முடித்திருந்தால் போதுமானது.

  • அடுத்து ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு என்னென்ன படிக்க வேண்டும் என்பதை யூ.பி.எஸ்.சி பாடத்திட்டம் வகுத்துத்தருகிறது. அதைப் பதிவிறக்கம் செய்துகொண்டு படிக்க வேண்டும்.

முதல்நிலைத் தேர்வு (Priliminary Exam)

  • இது இரண்டு தாள்களைக்கொண்டிருக்கும். இந்தத் தாள்கள், சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கும்வகையில் இருக்கும்.

  • முதல் தாள் General Studies. இது பொது அறிவைச் சோதிக்கக்கூடியது.

  • இரண்டாம் தாள், திறனறிவைக் கூர்தீட்டக்கூடியது.

  • முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த நிலை தேர்வான முதன்மைத் தேர்வுக்குச் (Main Exam) செல்ல முடியும்.

  • முதல்நிலை தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெறுகிறீர்கள் என்பதை உங்களுடைய ரேங்கிங் பட்டியலில் கணக்கிடுகிறார்கள். திறனறிவு தேர்வில் 33 சதவிகிதம் மதிப்பெண் பெற்றாலே தகுதி பெற்றுவிடலாம்.

முதன்மைத் தேர்வு (Main Exam)

  • முதன்மைத் தேர்வில் நான்கு பொது அறிவு தாள்களும், ஒரு விருப்பப் பாடம் (Optional Subject) சார்ந்த இரண்டு தாள்களும் இருக்கின்றன.

  • ஒரு கட்டுரை வடிவில் (Essay) தாள் ஒன்றும், ஆங்கில மொழி தாள் ஒன்றும், இந்திய மொழிகளில் ஒரு தாளும் இருக்கின்றன.

  • ஆகமொத்தம், ஒன்பது தாள்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தாளுக்கும் 250 மதிப்பெண். இதில் ஆங்கிலமொழி தாளுக்கான மதிப்பெண்ணும், இந்தியமொழி தேர்வுக்கான மதிப்பெண்ணும் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படாது.

  • இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படும் மதிப்பெண் அடிப்படையில், பெர்சனாலிட்டி தேர்வுக்கு (Personality Interview) அழைக்கப்படுவார்கள்.

 

Personality Interview

  • இதில் 275 மதிப்பெண். இதில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறீர்கள் என்பதையெல்லாம் கூட்டி அதிக மதிப்பெண் பெற்றிருப்பவர்களின் ரேங்க் பட்டியலில் வெளியிடப்படும்.

  • இவ்வாறு பட்டியல் வெளியிடப்படும்போது தேர்வு எழுதுபவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், பட்டியலில் உள்ள தகுதிநிலை அடிப்படையிலும் பணி ஒதுக்கீடு செய்யப்படும்.

IAS TRAINING

  • அதன்பிறகு பயிற்சி வழங்கப்படும். தகுதிநிலை அடிப்படையில் மாநில ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். இதை எல்லாம் யூ.பி.எஸ்.சி இணையதளத்தில் குறிப்பிட்டிருப்பார்கள்.

 

மேலும் தகவல்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

 

 

error: Content is protected !!