REFERENCE |
VIDEO IN TAMILTAMIL |
ENGLISH
|
UPSCTAMIL.COM
in
5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி
ANSWER MODEL
IoT என்பது தனித்துவமாக அடையாளப்படுத்தப்படும் பொருட்களை இணையத்துடன் இணைக்கும் ஒரு வலை. இதில் பொருட்கள் என்பதில் எந்திரங்கள், பொது சாதனங்கள், மனிதர்கள், விலங்குகள் யாவும் அடக்கம்.
கைக்கடிகாரம் போல நாம் உடலில் பொருத்தி உடற்பயிற்சி முதல் உடல்தன்மை வரை கண்காணிப்பு செய்யும் சாதனங்கள், தானியங்கி இல்லம் (Home Automation) என IoT பயன்பாட்டிற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன.
பயன்பாடுகள் சிலவற்றை பார்ப்போம்:
மருத்துவ சேவை:
கையில் பட்டை போல் அணிந்து உடற்பயிற்சி செய்வதற்கு பயன்படும் சாதனங்கள் IoT யின் பிரபலமான பயன்பாடுகளில் ஒன்று. இது மட்டுமல்ல, நீரழிவு மற்றும் இதய நோய் கொண்ட நோயாளிகளின் உடல் நிலையை கண்காணிப்பதிலும் பங்காற்றுகிறது.
உடலில் இணைக்கப்பட்ட சென்சார்கள், உடல் தன்மை, மருந்து உட்கொள்ளல், ஊட்டச்சத்து, உடற்பயிற்சி (Motion Tracking Sensors) முதலான தரவுகளை சேகரிக்கும். சுற்றுப்புற சென்சார்கள் நோயாளி இருக்கும் அறையின் காற்றின் தரம், வெப்பநிலை, மற்ற ஆபத்துகள் இவற்றை சேகரிக்கும்
இவை மைக்ரோ பிராஸஸர் அல்லது மைக்ரோ கண்ட்ரோலருக்கு அனுப்பப்படும். தரவுகள் ஆராயப்பட்டு கேட்வே மூலம் கிளவுடில் இணைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை சிஸ்டம்களுக்கு அனுப்பப்படும்.
சரியான நேரத்தில் சரியான அளவில் (Dosage) மருந்துகளை வினியோகம் செய்யும் சாதனங்களிலும் பயன்படுகிறது.
தானியங்கி இல்லம்:
சூழல் மற்றும் நேரத்துக்கு தகுந்தாற்போல் தாமாகவே இயங்கும் விளக்குகள் (Smart Lightings and Smart Thermostats), துணிகளின் தன்மை, அழுக்கு இவற்றை உணர்ந்து அதற்கு தகுந்தாற்போல் சுழற்சியை முடிவு செய்து இயங்கும் துணி துவைக்கும் எந்திரங்கள் (Smart Washing Machines) என IoT இன் பயன்பாடுகளுக்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.
இத்தகைய சாதனங்கள் பயனீட்டாளர்களின் வேலையை சுலபமாக்குவது மட்டுமின்றி, ஆற்றல் சேமிப்பிலும் (Energy Saving) முக்கிய பங்காற்றுகின்றன.
இண்டஸ்ட்ரி 4.0 (Industry 4.0):
அடுத்த தொழிற்புரட்சியாக கூறப்படும் இண்டஸ்ட்ரி 4.0-இல் Internet of Things (IoT) யின் பங்கு அளப்பரியது. ஸ்மார்ட் ஃபாக்டரிகளில், Internet of Things (IoT) ஆனது, சாதனங்கள், சென்சார்கள், எந்திரங்கள் மற்றும் தொழிற்சாலையின் மற்ற பல பாகங்ககளையும் இணைக்கிறது. Internet of Things (IoT) மூலம் கிடைக்கும் தரவுகளை பெரிதும் பயன்படுத்துவதன் மூலம் சிக்ஸ் சிக்மா (Six Sigma) போன்ற தொழில்நுட்பங்கள் நல்ல பலன்களை அறுவடை செய்யத் துவங்கி உள்ளன.
IoT யின் அடுத்த கட்டங்கள்
Cloud to Edge:
Internet of Things (IoT) -யினால் சேகரிக்கப்படும் தரவுகளின் அளவு மிகப் பிரம்மாண்டமானது. இது அத்தனையையும் ஆராய்வதற்க்காக கிளவுட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது பெரிய தலைவலி. இதற்கு மாற்றாக எட்ஜ் டெக்னாலஜியை (Edge Technology) நோக்கி ஸிஸ்கோ, ஹெச் பி இ, டெல் போன்ற நிறுவனங்கள் பயணிக்கத் தொடங்கி உள்ளன.
What is the “Internet of Things (IoT)”?
The internet of things (IoT) is a concept that describes the idea of everyday physical objects being connected to the internet. In the Internet of Things, the connected devices should be able to identify themselves to other devices.
Simply put, this is the concept of basically connecting any device with an ON and OFF switch to the Internet or to each other. This includes everything from cell phones, coffee makers, washing machines, headphones, lamps, wearable devices and almost anything else you can think of.
Examples of ‘things’ which can be connected to internet include:
Connected Wearables – Smartwatches, Smart glasses, fitness bands etc.
Connected Homes – connecting household appliances to the network.
Connected Cars – vehicles that are connected to the internet.
Connected Cities – smart meters which analyse usage of water, gas, electricity etc connect cities to IoT
APPLICATIONS