EXPLAIN THE FEATURES OF 73rd CONSTITUTIONAL AMENDMENT. / 73 வது அரசியலமைப்பு திருத்தத்தின் முக்கிய அம்சங்களை விளக்குக.

 

REFERENCE

TAMIL

ENGLISH

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

 

உள்ளாட்சி அமைப்புகள்

[the_ad id=”5123″]

73 வது அரசியலமைப்பு திருத்தச் (1992) சட்டத்தின்படி ஊராட்சிஅமைப்புகளுக்கு அரசியலமைப்பு ரீதியானஅங்கீகாரம் அளிக்கப்பட்டது.
73 வது திருத்தம் 24.04.1993 ல் அமலுக்கு வந்தது.பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அரசியல் ரீதியான அங்கீகாரம் திரு நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு வழங்கியது.

 

73 வது திருத்தத்தின் படி

1.பகுதி ஒன்பது இணைக்கப்பட்டது.
2. சரத்துகள் 243 முதல் 243-d வரை 16 சரத்துகள்
3.11 வது அட்டவணை போன்றவைகளும் இணைக்கப்பட்டது.
4.11 வது அட்டவணை29 துறைகள்
இத்திருத்தம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஊராட்சி அமைப்பை ஏற்படுத்த வழி வகுத்தன.
ஒரு ஊராட்சிக்கு அதிகாரங்கள் மற்றும் பணிகளை அளிப்பது மாநில சட்டமன்றம் ஆகும்.
கிராம சபை என்பது அப்பகுதியில் உள்ள பதிவு பெற்ற அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கியது.

 

அம்சங்கள்

[the_ad id=”2159″]

  • மூன்றடுக்கு பஞ்சாயத்து முறையினை கூறுகிறது.
  • இட ஓதுக்கீடு
இதன்படி ஒவ்வொரு நிலை ஊராட்சியிலும் (மூன்று ) பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடி மக்களுக்கு அம்மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஓதுக்கீடு வழங்க வேண்டும். · ஊராட்சி தலைவர் பதவிக்கு பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடி மக்களுக்கு இடஓதுக்கீடு வழங்க மாநில சட்டமன்றம் வழி வகை செய்தல் வேண்டும். பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கிற்கு குறையாத இடங்கள்/உறுப்பினர்கள் ஒதுக்க வேண்டும்.
  • கட்டமைப்பு
மூன்று நிலைகளிலும் உள்ள உறுப்பினர்கள் நேரடித் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். · இடைநிலை மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் (தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் ) மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேண்டும். · கிராம பஞ்சாயத்து தலைவரை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதை மாநில சட்டமன்றம் தீர்மானிக்கும்
  • பதவிக்காலம்
மூன்று நிலைகளிலும் உள்ள ஊராட்சிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். · இப்பதவிக்காலம் முடியும் முன்பே மாநில அரசால் கலைக்கப்படலாம். அவ்வாறு கலைக்கப்பட்டால்,கலைக்கப்பட்ட தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் தேர்தல் வைத்து புது ஊராட்சிகளை அமைக்க வேண்டும்.
  • மாநில நிதிக்குழு
  • [the_ad id=”6242″]
மாநில ஆளுநர் ,73 வது திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த ஒரு ஆண்டிற்குள் ஒரு நிதிக் குழுவினை அமைக்க வேண்டும். இந்நிதிக்குழு ஊராட்சி அமைப்புகளின் நிதிநிலையை மறு ஆய்வு செய்து பரிந்துரைகள் ஆளுநருக்கு அனுப்பும்.
  • கணக்குகளின் தணிக்கை
மாநில சட்டமன்றம் இயற்றும் சட்டத்தின்படி ஒவ்வொரு ஊராட்சி அமைப்புகளும் கணக்கு நிர்வகித்தல் மற்றும் தணிக்கை செய்ய வேண்டும்.
  • மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையர் ஆளுரால் நியமிக்கப்படுகிறார். பஞ்சாயத்துக்களின் தேர்தல் மேற்பார்வை ,வாக்காளர் பட்டியல் தயாரிப்பு கட்டுப்பாடு போன்றவைகளை நடத்துவது மாநில தேர்தல் ஆணையம் ஆகும்.

 

The Panchayati Raj

[the_ad id=”5123″]

In India, the Panchayati Raj generally refers to the system of local self-government in India introduced by a constitutional amendment in 1992.

The Balwant Rai Mehta Committee, headed by MP Balwantrai Mehta, was a committee appointed by the Government of India in January 1957 to examine the work of the Community Development Programme (1952) and the National Extension Service (1953), to suggest measures to improve their work.

Finally A committee led by LM.Singhvi was constituted in the 1980s to recommend ways to revitalize PRIs

The Panchayati Raj now functions as a system of governance in which gram panchayats are the basic units of local administration.

The system has three levels: Gram Panchayat (village level), Mandal Parishad or Block Samiti or Panchayat Samiti (block level), and Zila Parishad (district level).

It was formalized in 1992 by the 73rd amendment to the Indian Constitution. Currently, the Panchayati Raj system exists in all states except Nagaland, Meghalaya, and Mizoram, and in all Union Territories except Delhi.

 

FEATURES:

[the_ad id=”2159″]

The Gram Sabha or village assembly as a deliberative body to decentralised governance has been envisaged as the foundation of the Panchayati Raj System

A uniform three-tier structure of panchayats at village.

Not less than one-third of the total seats for membership as well as office of chairpersons of each tier have to be reserved for women.

Reservation for weaker castes and tribes (SCs and STs) have to be provided at all levels in proportion to their population in the panchayats.

To supervise, direct and control the regular and smooth elections to panchayats, a State Election Commission has The Act has ensured constitution of a State Finance Commission in every State/UT, for every five years, to suggest measures to strengthen finances of panchayati raj institution.

An indicative list of 29 items has been given in Eleventh Schedule of the Constitution.

 

[the_ad id=”6242″]