EXPLAIN ABOUT TN-SMART APP. / TN-SMART கைபேசி செயலி பற்றி விவரி

REFERENCE

TAMIL[the_ad id=”5123″]

ENGLISH[the_ad id=”2159″]

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

பேரிடர் குறித்த தகவல்கள், முன்னெச்சரிக்கைகள், மழைப்பொழிவின் அளவு ஆகியவற்றை பதிவு செய்யப்பட்ட பயனாளர்கள் அறிய TN-SMART என்ற கைபேசி செயலி தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

BODY

1.இதன் மூலம் இருப்பிட அடிப்படையிலான உத்தேச மழையளவு, வெள்ள அபாயம் குறித்த முன்கணிப்பு மற்றும் வெள்ளத்தின் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்த தகவல்கள் போன்றவற்றை இச்செயலி மூலம் பெற இயலும்.[the_ad id=”2726″]

2.இச்செயலியானது தனிப்பட்ட எச்சரிக்கை ஒலியமைப்பு முறையை கொண்டது. இதனால் சுனாமி, புயல் போன்ற பேரிடர்களின் போது, அமைதி நிலையில் (Silent mode) வைக்கப்பட்டு இருக்கும் கைப்பேசியில் இருந்து கூட எச்சரிக்கை ஒலியுடன் செய்தியை பெற முடியும்.

இந்த எச்சரிக்கை ஒலி செய்தி பயனாளர்கள் பார்த்த பின்புதான் நிற்கும்..

3.இந்த இணையதள அமைப்பு மற்றும் செயலி, முன்னறிவிப்பு தகவல்களை அளிப்பதோடு மட்டுமில்லாமல், பொதுமக்களிடம் இருந்து வரும் அவசர உதவி அழைப்புகளையும் பதிவு செய்து, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து, அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை கண்காணிக்க உயர் அலுவலர்களுக்கு உதவும்.[the_ad id=”5123″]

4.இதன் மூலம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், ஆயத்த பணிகள், மீட்பு, நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகளை முழுமையாக கண்காணிக்க இயலும்

CONCLUSION

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.