EXPLAIN ABOUT SUSTAINABLE DEVELOPMENT GOALS (SDG) OF UN. / ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பற்றி விளக்குக.

நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள்
  • நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் உலகளாவிய இலக்குகள் என்றும் அழைக்கப்படும்.
  • நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG கள்) – ஐக்கிய நாடுகள் சபையின் 17 உலகளாவிய இலக்குகளின் தொகுப்பு ஆகும்.
  • நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் என்பவை வருங்காலத்தில் பன்னாட்டு வளர்ச்சியானது எட்டவேண்டிய இலக்குகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழிவுகளாகும்.
  • இவை ஐக்கிய நாடுகளால் உருவாக்கப்பட்டு, நிலையான அபிவிருத்திக்கான உலகளாவிய நோக்கங்களாக ஊக்குவிக்கப்படுகின்றன.
  • இவை 2015ஆம் ஆண்டின் இறுதியில் காலாவதியான புத்தாயிரமாண்டு வளர்ச்சிக் குறிக்கோள்களைப் பதிலீடு செய்வனவாகும்.
  • இது, 2016 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான பதினைந்து ஆண்டு காலத்திற்குரிய 169 குறிப்பிட்ட இலக்குகளுடன் கூடிய 17 பன்னாட்டு வளர்ச்சிக்கான குறிக்கோள்களைக் கொண்ட தீர்மானம் ஆகும்.
  • இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசின் கொள்கைகளை உருவாக்கும், ‘நிதி ஆயோக்’ அமைப்பு, மத்திய புள்ளியியல் துறையுடன் இணைந்து, இந்தாண்டு, முதன் முறையாக, இந்திய மாநிலங்களின் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டை தயாரித்துள்ளது
இலக்குகள்
  1. வறுமையை ஒழித்தல்
  2. வேளாண்மை ஊக்குவித்தல், பசியை போக்குதல், சத்தான உணவு கிடைக்க செய்தல்
  3. எல்லா வயதினருக்குமான ஆரோக்யமான வாழ்வை உறுதி செய்தல்
  4. அனைவருக்கு தரமான கல்வி கிடைக்க செய்தல்
  5. பாலின பாகுபாடின்மையை உருவாக்குதல், பெண்களுக்கு அதிகாரமளித்தல்
  6. சுத்தமான குடிநீர், சுகாதாரமான சூழல் – அனைவருக்கும் கிடைக்க செய்தல்
  7. மலிவான, நம்பகமான, நிலையான, நவீன ஆற்றலை அனைவரும் பெற செய்தல்
  8. நிலையான பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு கிடைக்க செய்தல்
  9. வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு, உற்பத்தி, கண்டுபிடிப்பு
  10. நாடுகளுக்குள்ளேயும், நாடுகளுக்கிடையேயுமான சமத்துவமின்மையை ஒழித்தல்
  11. வாழ்விடங்களை மேம்படுத்துகல்
  12. தேவைக்கேற்ற உற்பத்தியை உறுதிப்படுத்துதல்
  13. பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ளுதல்
  14. நிலையான நீடித்த வளர்ச்சிக்கு கடல் வளங்களை காத்தல்
  15. சுற்றுச்சூழலை காத்தல், பல்லுயிராக்க இழப்பை தடுத்தல், காடுகளை காத்து பாலைவனமாக்கலை தடுத்தல்
  16. அமைதியான சூழலை சமூகத்தில் ஏற்படுத்துதல், எல்லா தரப்பினருக்கும் பாகுபடற்ற நீதி பெற செய்தல்
  17. நிலையான வளர்ச்சிக்கு உலகளாவிய ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல்

 

 

Sustainable Development
Sustainable Development refers to meeting the needs of the present without compromising the ability of future generations to meet their own needs.
Goals
The Sustainable Development Goals (or SDG’s) are a collection of 17 global goals set by the United Nations General Assembly in 2015 for the year 2030. the 2030 Agenda.
The Sustainable Development Goals are:

 

  1. No Poverty,
  2.  Zero Hunger,
  3. Good Health and Well-being,
  4.  Quality Education,
  5. Gender Equality,
  6. Clean Water and Sanitation,
  7. Affordable and Clean Energy,
  8. Decent Work and Economic Growth,
  9. Industry, Innovation, and Infrastructure,
  10. Reducing Inequality,
  11. Sustainable Cities and Communities,
  12. 12) Responsible Consumption and Production,
  13. Climate Action,
  14. Life Below Water,
  15. Life On Land,
  16. Peace, Justice, and Strong Institutions,
  17. Partnerships for the Goals.
The goals are broad-based and interdependent. The 17 Sustainable Development Goal’s each have a list of targets that are measured with indicators.