புதிய மேம்பாட்டு வங்கி (பிரிக்ஸ் வங்கி) / New Development Bank (BRICS Bank)

  • இந்த வங்கி பிரிக்ஸ் (BRICS) நாடுகளால் இயக்கப்படும் பலதரப்பு மேம்பாட்டு வங்கியாகும்.
  • ஐந்தாவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் (2013 டர்பன், தென்னாப்பிரிக்கா) ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆறாவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் (2014, பிரேசில்) இல் நிறுவப்பட்டது.
  • வளர்ந்து வரும் மிக முக்கிய ஐந்து நாடுகளின் நிதி மற்றும் மேம்பாடு சார்ந்த ஒத்துழைப்பை வழங்குவதற்காக இந்த வங்கி அமைக்கப்பட்டது.
  • இந்த வங்கியின் தலைமையகம் சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் அமைந்துள்ளது.
  • உலக வங்கியை போல் அல்லாமல், உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஓட்டு என்று ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த நாட்டிற்கும் ‘வீட்டோ’ அதிகாரம் இல்லை.

 

அமைப்பு :
  • ஆளுநர் குழு, இயக்குனர் குழு, தலைவர் மற்றும் நான்கு துணை தலைவர்கள் (நான்கு நாடுகளில் இருந்து ஒவ்வொரு துணைத் தலைவர்கள்).

 

உறுப்பினர்கள்:

 

B – பிரேசில்
R – ரஷ்யா
I – இந்தியா
C – சீனா மற்றும்
S – தென்னாப்பிரிக்கா ஆகியவை புதிய வளர்ச்சி வங்கியின் ஸ்தாபன நாடுகள் ஆகும்.

 

  • பிரிக்ஸ் நாடுகளின் வாக்களிக்கும் சக்தி 55% சதவீதத்துக்கும் குறைவாக இருக்கக் கூடாது.

 

எதிர்கால உறுப்பினர்கள்:
  • ஐநாவில் உறுப்பினராக இருக்கும் அனைத்து நாடுகளும் புதிய வளர்ச்சி வங்கியில் உறுப்பினராக தகுதி உள்ளது.
 

 

About NDB:

 

  • It is a multilateral development bank led by the BRICS countries (Brazil, Russia, India, China and South Africa).
  • At the 5th BRICS summit in Durban, South Africa, in 2013, the BRICS presidents agreed to it.
  • It was established in 2014 at the 6th BRICS Summit in Fortaleza, Brazil.
  • The bank was founded to promote greater financial and development cooperation among the five emerging markets.
 
Voting:
 
  • Unlike the World Bank, which awards votes based on capital share, the New Development Bank will give each participant country one vote, with no country having veto power.
 
Roles and functions:
 
  • To augment existing efforts of multilateral and regional financial organisations for global growth and development, the Bank will mobilise resources for infrastructure and sustainable development projects in the BRICS and other emerging economies and underdeveloped nations.