பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா

திட்டத்தின் நோக்கம்:
  • வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு எல்பிஜி இணைப்புகளை வழங்குதல்.
  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
  • மே மாதம் 2016 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

முக்கிய அம்சங்கள்:
  • தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வைப்புத்தொகை இல்லாத இணைப்பும், ரூபாய் 1600 நிதி உதவியும் வழங்கப்படுகின்றது.
  • மலைப்பாங்கான பகுதிகளில் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

இலக்கு:
  • முன்பு 5 கோடி குடும்பங்கள், தற்போது 8 கோடி குடும்பங்கள்.
 
திட்டத்தில் சேர தகுதி:

 

  • விண்ணப்பதாரர் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாக இருக்க வேண்டும்.
    வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
     
  • விண்ணப்பதாரர் வீட்டில் ஏற்கனவே எல்பிஜி இணைப்பு இருக்கக் கூடாது.
  • இது போன்று வேறு திட்டத்தில் ஏற்கனவே பயனாளி ஆக இருக்கக் கூடாது.

திட்டத்தின் குறிக்கோள்:
  • பெண்களை மேம்படுத்துதல் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்தல்.
  • கார்பனை அடிப்படையாகக் கொண்ட சமையலுடன் தொடர்புடைய கடுமையான உடல்நலக் கேடுகளை சமையல்எரிபொருள் அசுத்தம் காரணமாக ஏற்படும் உடல்நல குறைபாடுகள் மற்றும் இழப்புகளை குறைத்தல்.
  • மாசுபடுத்தும் எரிபொருளை குறைப்பதன் மூலம் அதனால் ஏற்படும் கடுமையான போக்க கோளாறில் இருந்து வயதானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாத்தல் இந்தத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும்.