தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் என்றால் என்ன?What is Chief Minister’s Comprehensive Health Insurance Scheme

 

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குவதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.[the_ad id=”5123″]

BODY

1.தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்படும். இத்திட்டத்தினால் சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர்.

• இந்த திட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யபட்டுள்ளது.[the_ad id=”2159″]

• இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

 

2.பயன்கள் :

    

• அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோய்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்க்கு, ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்கான மருத்துவ பட்டியல் CMCHISTN வலைத்தளத்தில் இணைக்கபட்டுள்ளது.[the_ad id=”5123″]

    • இந்த திட்டத்தில் மருத்துவ சிகிச்சைகள் மட்டுமல்லாமல் நோய் கண்டறியும் சோதனைகளும்  வழங்கப்படுகின்றன.

உதவி மையம் : 

  • இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தொிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை தொலைபேசி எண் 1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம்.[the_ad id=”2159″]

CONCLUSION

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.