ஜிக்கா வைரஸ் என்றால் என்ன?தடுப்பு நடவடிக்கைகளை பற்றி எழுதுக. / WHAT IS ZIKA VIRUS AND WRITE ABOUT PREVENTIVE MEASURES.

REFERENCE

TAMIL

TAMIL

ENGLISH

INTRODUCTION 
  • ஜிக்கா வைரஸ் ஏடீஸ் கொசுக்களால் ஜிக்கா வைரஸ் பரவுகிறது.
  • வைரஸ் பாதிப்பு உள்ளவரின் ரத்தத்தை மற்றவருக்கு ஏற்றினாலும் வைரஸ் பரவும். உடலுறவு மூலமும் வைரஸ் பரவுவதாக கூறப்படுகிறது.
  • வைரஸ் தாக்கினால் லேசான காய்ச்சல், கை, கால் வலி, கண் சிவப்பாகுதல், அரிப்பு ஆகியவை ஏற்படும்.
BODY
1.எப்படி தடுப்பது — கொசுக்கள் கடிக்காமல் இருந்தால் ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருக்காது. கொசுக்கள் கடிப்பதை தவிரக்க கிரீம்கள், கொசுவர்த்திகள் பயன்படுத்துவதுடன், உடல் பாகங்கள் முழுவதையும் மறைக்கும்படி உடை அணிய வேண்டும். படுக்கையில் கொசு வலை பயன்படுத்த வேண்டும். ஜன்னல்களுக்கு ஸ்கிரீன் போட வேண்டும்.
2.சுத்தம் — சுத்தான நீரை மூடிய பாத்திரங்களில் வைக்கவும். குப்பைகளை வீட்டில் சேர்த்து வைக்க வேண்டாம். தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏடீஸ் கொசுக்கள் மக்களை பகல் நேரம் மற்றும் மாலை வேளையில் தான் கடிக்கும்.
3.சிகிச்சை — ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் சாதாரண காய்ச்சல், வலிக்கு பயன்படுத்தும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றாக ஓய்வு எடுப்பதுடன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஜிக்கா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
CONCLUSION