EXPLAIN ABOUT THE FUNCTIONS OF RBI. / இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விளக்குக.

REFERENCE

TAMIL

ENGLISH

 

இந்திய ரிசர்வ் வங்கி நிறுவன அமைப்பு:

[the_ad id=”5123″]

இந்திய ரிசர்வ் வங்கி 1935 ஆம் ஆண்டு எப்ரல் முதல் நாள் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் விதிகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டதும் முதலில் அதன் மத்திய அலுவலகம் கொல்கத்தாவில் இயங்கியது. பின்னர் நிரந்தரமாக 1937லிருந்து அது மும்பைக்கு மாற்றப்பட்டது. இந்த மத்திய அலுவலகத்தில் தான் வங்கியின் கவர்னர் அமர்ந்து கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன.
தொடக்கத்தில் தனியாருக்குச்சொந்தமானதாக இருந்த போதிலும் 1949 இல் தேசிய மயமாக்கப்பட்டதன் பின்னரே, இந்திய ரிசர்வ் வங்கி முழுமையாக இந்திய அரசுக்குச் சொந்தமானது.

இந்திய ரிசர்ப் வங்கிச் சட்டம், 1934; ரிசர்வ் வங்கியின் பணிகளை வரையறுக்கிறது.

பணிகள் :

[the_ad id=”2159″]

1. பொதுவான மேற்பார்வையும் வங்கி விவகாரங்களை இயக்குதலும்.
2. நிதியியல் மேற்பார்வை
நிதியியல் மேற்பார்வைக் குழுமத்தின் வழிகாட்டுதல்படி இந்திய ரிசர்வ் வங்கி இப்பணியை மேற்கொள்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் மையக்குழுமத்தின் ஒரு குழுவாக இந்த நிதியியல் மேற்பார்வைக் குழுமம் 1994 நவம்பரில் துவக்கப்பட்டது.
நோக்கம்
வணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து உள்ளடக்கிய மேற்பார்வையும் கண்காணிப்பும்.
3. பண அதிகாரி:
பணக்கொள்கையை உருவாக்கிச் செயல்படுத்தி மேற்பார்வை செய்கிறது.
நோக்கம்: விலைகளின் நிலைத்தன்மையைப் பேணுதல்;உற்பத்திப்பிரிவுகளுக்குபோதுமானநிதியோட்டத்தைஉறுதிசெய்தல்
4. அந்நியச் செலாவணி மேலாளர்
அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டம் 1999 ஐ நிர்வகிக்கிறது.
நோக்கம்: பன்னாட்டு வணிகத்திற்கும் பணவழங்கலுக்கும் வழிகோலுதல், மற்றும் அந்நியச் செலாவணி சந்தையை இந்தியாவில் ஒழுங்காகவும் முறையாகவும் பாதுகாத்து வளர்த்தல்.
பணம் வழங்கு அதிகாரி
5. பணத்தாளினை வழங்குகிறது: மாற்றுகிறது; புழக்கத்துக்குத் தகுதியற்ற பணத்தாள்களையும் நாணயங்களையும் அழிக்கிறது.
நோக்கம்: பொதுமக்களுக்குப் போதுமான அளவில் பணத்தாள்களையும் நாணயங்களையும் தரமிக்கதாக வழங்குதல்.
மேம்பாட்டுப் பணி
6. தேசிய நோக்கங்களுக்கு உதவும் வகையில் பரந்துபட்ட முன்னேற்றப் பணிகளை மேற்கொள்கிறது.

7. தொடர்புடைய பணிகள்

அரசின் வங்கி: மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் வணிக வங்கிப் பணிகளைச் செய்கிறது; மேலும் அவர்களின் வங்கியாளராகவும் செயல்படுகிறது.
வங்கிகளின் வங்கி: அனைத்து அட்டவணை வங்கிகளின் கணக்குகளையும் பராமரிக்கிறது.

[the_ad id=”6242″]

The Reserve Bank of India:

 

The Reserve Bank of India is India’s central bank and is wholly owned by the Government of India. Established on April 1, 1935, the RBI’s main office is located in India’s capital of Mumbai.

Active management of the Reserve Bank of India (RBI) is provided by the central board of directors, which includes the bank’s governor, a maximum of four deputy governors, and a few directors of relevant local boards.

 

The main functions of the RBI include:

[the_ad id=”5123″]

Monetary authority: formulates, implements, and monitors India’s monetary policy. The main objectives of which are maintaining price stability, ensuring adequate flow of credit to productive sectors, and financial stability.

Issuer of currency: issues currency and coins, and exchanges or destroys currency notes and coins unfit for circulation.

Banker and debt manager to government of India: performs merchant banking functions for central and state governments and also acts as their banker. Determines how best to raise money in debt markets to help the government finance its requirements.

Banker to banks: enables clearing and settlement of inter-bank transactions, maintains banks’ accounts for statutory reserve requirements, and acts as a lender of last resort

Regulator and supervisor of the financial system: protects the interests of depositors, facilitates orderly development and conduct of banking operations, and maintains financial stability through preventive and corrective measures.

Manager of foreign exchange: regulates transactions related to the external sector, enables the development of the foreign exchange market (forex), ensures smooth functioning of the domestic forex market, and manages India’s foreign currency assets and gold reserves

[the_ad id=”2159″]

 

[amazon_link asins=’8192516741,819251675X’ template=’ProductGrid’ store=’upsctamil-21′ marketplace=’IN’ link_id=’ad206d61-2227-435e-8ec5-7cfcd850d2a9′]

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.