பொது சேவை மையம் (Common Service Center) என்றால் என்ன?

பொது சேவை மையம்
  • பொது சேவை மையம் என்பது டிஜிட்டல் இந்தியா (Digital India) திட்டத்தின் ஒரு முக்கிய கூறாகும்.
  • இவை கிராமங்களுக்கு பல்வேறு மின்னணு சேவைகளை (E-Service) வழங்கும் புள்ளியாக உள்ளது.
  • அரசின் டிஜிட்டல் மற்றும் நிதி சார்ந்த சேவைகளுக்கு உதவுகிறது.
  • நாட்டின் தொலைதூரத்தில் உள்ள கிராமங்களில் B2C (Business to Customer) சேவைகளை வழங்குவதற்கும், அத்தியாவசிய சேவைகள், சமூக நலத்திட்டங்கள், சுகாதாரம், நீதி,கல்வி மற்றும் விவசாய சேவைகளை வழங்குவதற்காக இந்த பொது சேவை மையம் உள்ளது.
 
 
 
பொது சேவை மையத்தின் மூன்று பகுதிகள்
  1. ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான டிஜிட்டல் உட்கட்டமைப்பை ஏற்படுத்துதல்.
  2. தேவைக்கேற்ற ஆளுகை மற்றும் சேவைகள் வழங்குதல்.
  3. குடிமக்களுக்கு டிஜிட்டல் அதிகாரம் வழங்குதல்.
முக்கியத்துவம்:
கிராமப்புற பகுதிகளில் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதிலும் கிராமப்புற திறன் மேம்பாடு, வாழ்வாதார மேம்பாடு போன்றவற்றின் மீதும் முக்கிய கவனம் செலுத்துகிறது.
அடிப்படை:
ஈ- ஆளுமையை இந்திய அளவில் அமல்படுத்துவதற்கான குறைந்தபட்ச தேசிய பொதுத் திட்டத்தின் ஒரு அங்கமாக 2006-ஆம் ஆண்டு பொது சேவை மையங்கள் (Common Service Center) அங்கீகரிக்கப்பட்டது.

 

error: Content is protected !!