EXPLAIN ABOUT TAMIL NADU FOOD PROCESSING POLICY-2018. / தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை-2018 பற்றி  விவரி.

REFERENCE

தமிழ் ஹிந்து

THE HINDU

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

தமிழகத்தில் வேளாண் பொருட் கள் வீணாவதை தடுக்கவும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலும் உருவாக் கப்பட்ட ‘தமிழ்நாடு உணவு பதப் படுத்தும் கொள்கை-2018’ உருவாக்கப்பட்டுள்ளது.

BODY

1.நபார்டு நிதியுதவியில் கிருஷ்ண கிரி மாவட்டம் ஓசூரில் ரூ.1 கோடி மதிப்பில் 50 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு கட்டப்பட்டுள்ளது. ராமநாத புரம் மாவட்டம் திருவாடாணையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பில் 2 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, அலுவலக கட்டிடம், மதுரை மற்றும் விருதுநகரில் ரூ.1 கோடியே 50 லட்சத்தில் வேளாண் பொறியியல் விரிவாக்க மைய கட்டிடம் என ரூ.4 கோடியே 25 லட்சம் மதிப்பிலான கட்டிடங்கள் இதன் கீழ் அமைக்கப்பட்டுள்ளன.
2.வேளாண் பொருட்கள் வீணா வதை தடுக்க அதன் மதிப்பை கூட்டி, வலுவான மற்றும் திறன் மிக்க உணவு பதப்படுத்தும் தொழில் மையங்கள், முக்கியப் பங்கு வகிக்கின்றன. உணவு பதப்படுத்தும் தொழிலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உகந்த சூழலை உரு வாக்குவது இதன் நோக்கமாகும்.

3.விவசாயிகள் வருமானத்தை அதிகரித்தல், உணவுப் பொருட்கள் வீணாவதை குறைத்தல், பண்ணை பொருட்களின் மதிப்பு கூட்டுதல் போன்றவை இந்த கொள்கையின் குறிக்கோள்களாகும். இது தொழில் முனைவோரை ஊக்குவிப்பதுடன், தமிழகத்தில் அதிக அளவில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைக்க உரிய வசதி வாய்ப்பு களை அளிக்கும்.
4.இக்கொள்கையில் நிலம், நீர், மின்சாரம், முதலீட்டு மானியம், மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடி யின தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் வட்டி மானியம், வரி ஊக்கத் தொகை, முத்திரைக் கட்டண விலக்கு, சந்தைக்கட்டண விலக்கு, சந்தைப்படுத்த உதவி, தரச்சான்று, போக்குவரத்து உதவி உள்ளிட்ட பல சலுகைகள் அறிவிக் கப்பட்டுள்ளன. உணவு பதப் படுத்தும் கொள்கையின்படி, தமிழக அரசு உணவுப்பூங்காக்கள் அமைத்து தொழில் முனைவோர் மத்திய அரசிடம் இருந்து நிதியுதவி பெற வழிவகை செய்யும். மேலும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, உணவு பதப்படுத்தும் கொள்கையை செயல்படுத்தும் முகமையாக திகழும்.

CONCLUSION – விவசாயிகளின் வருமானத்தை 2022ம் ஆண்டிற்குள் இரட்டிப்பாக நினைக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு இந்த கொள்கை எந்த அளவிற்கு உறுதுணையாக இருக்கும் என்பதை பற்றி கூறி முடிக்கலாம்.

The Tamil Nadu Food Processing Policy–2018, seeks to provide incentives to investors over and above what is being offered by the State Industrial Policy of 2014.

FEATURES:

The government will provide 3% interest subvention per annum on term loans taken by investors for fixed capital investment and 5% for women or Scheduled Castes (SC) / Scheduled Tribes (ST) entrepreneurs.

The proposed SGST reimbursement will be provided to new industrial units with an investment of over ₹ 10 crore for 3 years from the date of commencement of business. The units should handle processing of medicinal plants, minor millets, poultry, fish, fruits and vegetables. The amount of investment would not include land cost.

The policy also envisages the provision of stamp duty exemption for notified food parks and industrial parks. Besides, market fee will be waived for fruits and vegetables purchased directly from farmers/farmer producer organisations (FPOs) and brought to the food parks for processing.

Flexibility in labour laws, as envisaged in the State Industrial Policy, priority in land allotment by SIPCOT or SIDCO, 99-year-long lease for investments of over 10 crore, capital subsidy and the single window clearance facility both for small and large industrial units are among the features of the policy.

Training for entrepreneurs, research institutes for food processing industry, transport, quality certification, financial support for exporting commodities, have also been envisaged in the policy.

The Agricultural Marketing & Agri Business department will be the nodal agency to implement the policy and it will coordinate with other departments, Central government and other agencies.

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.