1991ல் காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் அந்நிய மற்றும் தனியார் முதலீடுகளுக்குச் சந்தையைத் திறந்ததிலிருந்து இந்தியப் பொருளாதாரம் அரசு மற்றும் தனியார் துறைகளின் கலவையில் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது.
-
அபரிமிதமான முதலீடுகள் உள்ளே வருகின்றன.
-
விவசாயம், உற்பத்தித் துறை மட்டுமே என்று இருந்த சந்தையில் பல புதிய துறைகள் உருவாகின்றன.
-
பொருளாதாரம் உயர்கிறது.
-
பெரும்பாலானோர் சம்பளதாரர்களாகிறார்கள்.
-
மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுகிறது.
-
அரசுத் துறைகளைக் கீழே தள்ளி தனியார் துறைகளின் வீச்சு நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்கிறது
தனியார் துறையின் முக்கியத்துவம் என்ன?
-
நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை அதிகப்படுத்தியே ஆக வேண்டும். அதற்கு அபரிமிதமான முதலீடும், துறைகளை நவீனமயப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களும் ஒவ்வொரு துறைகளுக்கும் அவசியம்
-
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்ச் 2020 நிலவரப்படி மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கடன் ரூ.147 லட்சம் கோடியாக உள்ளது.
-
இது நாட்டின் ஜிடிபியில் 72.1 சதவீதம் ஆகும். கடன் அதிகரிப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து அரசுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகின்றன.
-
அரசு நிறுவனங்களின் தொடர் நஷ்டம்
-
அரசுத் துறைகள் தொடங்கப்பட்டபோது பொருளாதார சூழல் வேறு. அப்போதைய கொள்கை இன்றைய சூழலுக்குப் பொருந்தாது.
-
வணிக ரீதியிலான முடிவுகளை அரசு நிறுவனம் எடுக்கும்போது பல தடைகள், எதிர்ப்புகள் உள்ளன. இதனால் தேவையான மாற்றங்களைச் செய்வது கடினமாக உள்ளது.
-
தனியார் துறை அபரிமிதமான முதலீடுகளையும், சர்வதேச தரத்திலான தொழில் முறைகளையும் கொண்டுவரும். இதன்மூலம் உலகத்தரத்திலான பொருட்கள், சேவைகள் உற்பத்தி ஆகும். வேலைவாய்ப்புகள் பெருகும். சர்வதேச அரங்கில் நாட்டின் பொருளாதாரப் போட்டித்தகுதி உயரும்.
தனியார்மயத்தின் சிக்கல்களும் அபாயங்களும்
-
முதலில் தனியார் நிறுவனங்கள் முதலீடுகளைத் தீவிரமாக மேற்கொள்வதே அதன்மூலம் பெரும் லாபத்தை ஈட்டத்தான். அப்படியிருக்க நுகர்வோர் நலனைக் கருத்தில்கொண்டு செயல்படுவதற்கான சூழலை உத்திரவாதம் செய்வது யார்?
-
ஒரு துறையிலிருந்து அரசு ஒதுங்கிக்கொண்டு தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க முடிவெடுப்பதில் உள்ள சிக்கலை ஜியோ vs பிஎஸ்என்எல் ஒப்பீட்டின் மூலமே புரிந்துகொள்ளலாம்.
-
சந்தையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பது என்பது இறுதியில் வலுவான ஒரு சில நிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ் மாறும் நிலையை உண்டாக்கும்.
-
வலுவான நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களை ஒழித்துக்கட்டுவதற்கான வேலையில் இறங்கும். இதனால் பல நிறுவனங்கள் திவால் ஆகும். நிறுவனங்கள் திவால் ஆகும்போது அது நிதித் துறையில் பாதிப்பை உண்டாக்கும்
-
தனியார் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை நெறிமுறைகளை வகுக்காமல் அவற்றுக்கு கதவு திறந்துவிடும் ஆபத்துகள் ஏற்கெனவே பல துறைகளில் நிகழ்ந்துவிட்டன. அதற்கு ஒரு உதாரணம் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ். மல்லையாவுக்குச் சொந்தமான இந்நிறுவனத்தின் வருகையும் வீழ்ச்சியும் இந்திய விமான சேவைத் துறையில் ஏற்படுத்திய வடு இன்னமும் ஆறாமல் இருக்கிறது.
-
சந்தையின் கட்டுப்பாட்டை அரசு நழுவவிட்டால் விலைவாசி உயர்வு, பற்றாக்குறை, பதுக்கல் போன்றவை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது
-
இன்னமும் அரசுப் பள்ளிகளும், அரசு மருத்துவமனைகளும் கொஞ்சம் மிச்சமிருப்பதால்தான் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வு ஓரளவேனும் காப்பற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கான மிச்சத்தையும் எடுத்து விடும்பட்சத்தில் அவர்களின் கதி என்ன என்பதுதான் கேள்வி.
தீர்வுகள்
-
தனியார் மயமாக்கல் நடவடிக்கையை எடுக்கும்போது அதற்கான சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் கடுமையாக நிர்ணயிப்பது அவசியம்.
-
அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் எல்லா தரப்பு மக்களுக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. முழுக்க முழுக்க தனியாரின் ஆதிக்கத்தில் இருக்கும் சந்தையில் இது சாத்தியமில்லை என்பதுதான் உண்மை.
REFERENCE |
TAMIL |
…. |
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் UPSC எழுதுவோருக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.